சால்டிசிடே குடும்பத்தைச் சேர்ந்த அரிய துள்ளும் சிலந்தியான கோலிட்டஸ் பிலினேட்டஸ், இந்தியாவில் முதன்முறையாக அசாமில் பதிவு செய்யப்பட்டது.
குஜராத்தின் கட்ச் ரான் பகுதியில் உள்ள தோலாவிராவில் சந்திர-வாழ்விட சூழலை உருவகப்படுத்தும் ஆய்வில் கலந்து கொண்டதன் மூலம், 17 வயதான ஆதித்ய பாண்டியா இத்தகையத் திட்டத்தில் பங்குபெற்ற இந்தியாவின் இளம் விண்வெளி வீரராக மாறியுள்ளார்.
Moltbook என்பது ஆக்டேன்ஏஐயின் தலைமை நிர்வாக அதிகாரி மேட் ஷ்லிச்ட் உருவாக்கிய AI-மட்டுமே அங்கம் வகிக்கும் சமூக வலைப்பின்னல் தளமாகும் என்ற நிலையில் இது செயற்கை நுண்ணறிவு (AI) முகவர்கள் மனிதத் தூண்டுதல்கள் அல்லது கட்டுப்பாடுகள் இல்லாமல் இடுகையிட, கருத்து தெரிவிக்க மற்றும் தொடர்பு கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கேரளா மாநிலமானது, ஆக்கிரமிப்பு தாவர இனங்களைக் கண்டறிய செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் இயங்கும் கைபேசி செயலியான NeophyteID-யை அறிமுகப் படுத்தியது.
பிரான்சில் நடைபெற்ற NIMES வில்வித்தைப் போட்டி 2026 இல், இந்திய வில்வித்தை வீரர் ஸ்மரன் சர்வேஷ் ரீகர்வ் 18 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார்.
கேரள மாநிலத்தில் உரிமையியல் நீதிபதி ஜூனியர் பிரிவு ஆட்சேர்ப்புக்கான நீதித்துறை சேவையின் மாற்றுத்திறனாளி தகுதிப் பட்டியலில் முதலிடம் பிடித்த முதல் பார்வையற்ற பெண்மணியாக தன்யா நாதன் சி மாறியுள்ளார்.
பார்வைக் குறைபாடுள்ள விண்ணப்பதாரர்களை நீதித் துறை சேவைக்கு தகுதி பெற அனுமதிக்கும் 2025 உச்ச நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து இந்தச் சாதனை எட்டப்பட்டுள்ளது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி மன்றம் (ICMR) கியாசனூர் வன நோய்க்கு (KFD) ஒரு தடுப்பூசியை உருவாக்கி வருகிறது.
KFD என்பது KFD ஃபிளவிவைரஸால் ஏற்படும் வைரஸ் ரத்தக்கசிவு காய்ச்சலாகும் என்ற நிலையில் இது உண்ணி கடித்தல் அல்லது பாதிக்கப்பட்ட விலங்குகளுடன் தொடர்பு கொள்வதன் மூலம் பரவுகிறது.
குளிர்கால ஒலிம்பிக் 2026 /மிலானோ கோர்டினா 2026 போட்டிகளானது பிப்ரவரி 2026 இல் இத்தாலியின் மிலன் மற்றும் கோர்டினா டி'ஆம்பெஸ்ஸோவில் நடைபெறும்.
அமெரிக்காவின் வாஷிங்டனில் நடந்த ஸ்குவாஷ் ஆன் ஃபயர் ஓபன் 2026 இல் தனது முதல் தொழில்முறை ஸ்குவாஷ் சங்க PSA வெண்கலப் பட்டத்தை வென்ற பிறகு இந்திய ஸ்குவாஷ் வீராங்கனை அனாஹத் சிங் உலகின் முதல் 20 வீரர்கள் தரவரிசையில் நுழைந்தார்.
கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் டிப்ளோசென்ட்ரம் பாப்பிலோசம் என்ற புதிய மந்தாரை இனத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர் என்ற நிலையில் இது தெற்கு மேற்குத் தொடர்ச்சி மலைகளில் வாழும் டிப்ளோசென்ட்ரம் இனத்தைச் சேர்ந்தது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், மாரடைப்பின் ஆரம்பக் கட்டங்களுடன் தொடர்புடைய ஒரு முக்கியமான இதய உயிரியக்கக் குறி காட்டியான மயோகுளோபினை விரைவாகக் கண்டறியும் திறன் கொண்ட ஒரு மிக நெகிழ்வான மற்றும் விலை மலிவான உயிரி-உணர்வியை உருவாக்கியுள்ளனர்.
மையோகுளோபின் என்பது இதயத் தசைக் காயத்திற்குப் பிறகு வெளிவரும் ஆரம்பகால உயிரியக்கக் குறிகாட்டியாகும்.