ஆசியாவிலேயே முதல் முறையாக மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூரில், ஆசிய-பசிபிக் பிராந்தியத்திற்கான சிறிய ஆயுதங்கள் மற்றும் இலகுரக ஆயுதங்கள் (SALW) கட்டுப்பாடு குறித்த ஐக்கிய நாடுகளின் தொடக்க பெல்லோஷிப் பயிற்சித் திட்டத்தை இந்தியா நடத்துகிறது.
அசாம் மாநிலம் கோலாகாட்டில் மூங்கிலை மூலப்பொருளாகப் பயன்படுத்தும் உலகின் முதல் வணிக அளவிலான இரண்டாம் தலைமுறை (2G) உயிரி எத்தனால் ஆலையை பிரதமர் திறந்து வைத்தார்.
பீகார் மாநில அமைச்சரவையானது சரண் மாவட்டத்தில் உள்ள சோனேபூரில் ஒரு புதிய சர்வதேச விமான நிலையத்தைக் கட்டுவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
மகாராஷ்டிராவின் வசாய் நகரில் உள்ள 475 ஆண்டுகள் பழமையான அருள் அன்னை கதீட்ரல், 2025 ஆம் ஆண்டுக்கான யுனெஸ்கோ ஆசிய-பசிபிக் கலாச்சாரப் பாரம்பரிய பாதுகாப்பு விருதுகளில் உயரிய நிலை விருதை வென்றுள்ளது.
ஜப்பானின் கீழவையானது மகத்தான தேர்தல் வெற்றிக்குப் பிறகு சனே தகைச்சியை மீண்டும் பிரதமராக நியமித்தது என்ற நிலையில் இதன் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட ஜப்பானின் முதல் பெண் பிரதமராக மாறியுள்ளார்.
எட்டு வயது ரன்வீர் சச்தேவா, இந்திய AI தாக்க உச்சி மாநாடு 2026 இல் உரையாற்றிய இளம் வயது பேச்சாளராக மாறியுள்ளார்.
இந்தியாவின் டாடா குழுமம், நாட்டின் முதல் பெரிய அளவிலான AI தரவு மையத்தை உருவாக்க OpenAI உடன் கூட்டு சேர்ந்துள்ளது.
நிதி ஆயோக்கின் கீழ் இயங்கும் அடல் புத்தாக்கத் திட்டம் (AIM), அடல் தொழிற்காப்பு மையங்களால் ஆதரிக்கப்படும் 30+ துறைகளில் 45 AI புத்தாக்க நிறுவனங்களை ஆவணப் படுத்தும் ஒரு காபி மேசைப் புத்தகமான AI-Preneurs of India ஐ அறிமுகப் படுத்தியது.
தமிழ் மற்றும் இந்தோ-ஐரோப்பிய மொழிகளின் ஒப்பீட்டுச் சொற்பிறப்பியல் அகராதியின் நான்காவது தொகுதியை தமிழ்நாடு துணை முதல்வர் சென்னையில் வெளியிட்டார்.
நான்காவது தொகுதியானது, மேற்கத்திய இந்தோ-ஐரோப்பிய மொழிகளான லத்தீன், கிரேக்கம், ஜெர்மன், பிரஞ்சு, ஆங்கிலம் மற்றும் சமஸ்கிருதம், பாலி மற்றும் சிங்களம் போன்ற கிழக்கு மொழிகளில் 19 தமிழ் மூலச் சொற்களிலிருந்து சொற்களின் வரலாற்று வளர்ச்சியைக் காட்டுகிறது.
உலகளாவிய AI அறிவுசார் பந்தய அறிக்கை 2026 ஆனது, செயற்கை நுண்ணறிவில் (AI) அமெரிக்காவை முதலிடத்திலும், சீனா (2வது) மற்றும் சிங்கப்பூர் (3வது) இடத்திலும் தரவரிசைப் படுத்துகிறது.
6வது இடத்தில் உள்ள இந்தியாவானது, திறன்மிக்கோர் தயார்நிலையில் வலுவான நிலையில் உள்ள போதிலும் உள்கட்டமைப்பு மற்றும் நிர்வாகத்தில் பலவீனமாக உள்ளது.
திபெத்தியப் புத்தாண்டையும் நெருப்பு குதிரை ஆண்டின் தொடக்கத்தையும் குறிக்கும் வகையில் லோசர் விழா 2026 பிப்ரவரி 18–20 வரை இமாச்சலப் பிரதேசத்தின் மெக்லியோட் கஞ்சில் கொண்டாடப்படுகிறது.
சோமி தேசிய தினம் பிப்ரவரி 20, 2026 அன்று மணிப்பூரின் சூரசந்த்பூர் மாவட்டத்தில் கொண்டாடப் பட்டது என்பதோடு இது அதன் 78வது கொண்டாட்டத்தைக் குறிக்கிறது.
சோமி சமூகத்தின் ஒற்றுமை மற்றும் கலாச்சார அடையாளத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ள இந்த நாள் சோமி தேசிய அமைப்பின் உருவாக்கத்தைக் குறிக்கும் வகையில் 1948 இல் முதன்முதலில் அனுசரிக்கப் பட்டது.