உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் (FAO) தலைமை இயக்குநரால் வழங்கப் படும் மிக உயரிய விருதான அக்ரிகோலா பதக்கத்தைப் பிரதமர் நரேந்திர மோடி பெற்றார்.
சென்னையின் புதிய காவல் ஆணையராக ஏ. அமல்ராஜ் நியமிக்கப்பட்டார், அதே நேரத்தில் பெருநகர சென்னை மாநகராட்சியின் ஆணையராக ஜி. எஸ். சமீரன் 2026 ஆம் ஆண்டு மே மாதம் பொறுப்பேற்றார்.
கான்பூர் இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் இயக்குநர் மணீந்திர அகர்வால், லண்டன் ராயல் சொசைட்டியின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அமெரிக்காவின் மத்திய வங்கி அமைப்பான ஃபெடரல் ரிசர்வின் 11வது தலைவராக கெவின் வார்ஷ் பதவியேற்க உள்ளார்.
கொரியப் போரின் 75வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், சியோல் அருகே உள்ள இம்ஜிங்காக் பூங்காவில் இந்தியப் போர் நினைவுச் சின்னத்தை ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார்.
மதரஸா கல்வி இயக்குநரகம் வெளியிட்ட உத்தரவின் மூலம், அரசு உதவி பெறும் அனைத்து மதரஸாக்களிலும் "வந்தே மாதரம்" பாடுவதை மேற்கு வங்காள அரசு கட்டாயமாக்கியுள்ளது.
வகுப்புகள் தொடங்குவதற்கு முன் மாணவர்கள் தேசிய கீதமான "ஜன கண மன" உடன் சேர்த்து "வந்தே மாதரம்" பாடலையும் பாட வேண்டும்.
LGBTQIA+ மக்கள் எதிர்கொள்ளும் பாகுபாடு மற்றும் வன்முறைகள் குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் மே 17 அன்று ஓரினச்சேர்க்கை, இருபால் ஈர்ப்பு மற்றும் திருநங்கையர் மீதான வெறுப்புக்கு எதிரான சர்வதேச தினம் (IDAHOT) அனுசரிக்கப்படுகிறது.
2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு "At the heart of democracy" என்பதாகும்.
தேனீக்கள் மற்றும் பிற மகரந்தச் சேர்க்கையாளர்களின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் மே 20 அன்று உலக தேனீக்கள் தினம் அனுசரிக்கப்படுகிறது.
2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு "Bee together for people and the planet – A partnership that sustains us all" என்பதாகும்.