TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

June 1 , 2026 3 days 115 0
  • சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகமானது சென்னை அருகே தையூரில் உள்ள தனது டிஸ்கவரி வளாகத்தில் புதிய சுழல் நீர் சுரங்கப்பாதை வசதியை திறந்துள்ளது.
    • மசகான் டாக் ஷிப்பில்டர்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் ₹4.5 கோடி பெருநிறுவன சமூகப் பொறுப்பு (CSR) நிதியுதவியுடன் கட்டப்பட்ட இந்த வசதி, கப்பல்கள், உந்து விசைகள் மற்றும் பிற கடல்சார் கட்டமைப்புகளை ஆய்வு செய்யப் பயன்படுத்தப் படும்.
  • கர்நாடக முதலமைச்சர் பதவியை சித்தராமையா 2026 ஆம் ஆண்டு மே 29 அன்று ராஜினாமா செய்தார்; ஆளுநர் தாவர்சந்த் கெலாட் அவரது ராஜினாமாவை ஏற்றுக் கொண்ட நிலையில் புதிய அரசாங்கம் பதவியேற்கும் வரை, சித்தராமையா இடைக்கால முதலமைச்சராகத் தொடர்ந்து செயல்படுவார்.
    • சித்தராமையாவிற்குப் பிறகு கர்நாடகாவின் அடுத்த முதலமைச்சராக டி.கே.சிவக்குமார் பதவியேற்க உள்ளார்.
  • இந்திரா மகிளா சக்தி திட்டத்தின் கீழ் மகளிர் சுய உதவிக் குழுக்களால் (SHGs) இயக்கப் படும் இந்தியாவின் முதல் சூரிய மின்சக்தி திட்டங்களை தெலுங்கானா மாநிலம் தொடங்கி வைத்துள்ளது.
    • தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் வெங்கடாபுரம் கிராமத்தில் 1 மெகாவாட் (MW) சூரிய மின்சக்தி நிலையம் திறக்கப்பட்டது.
  • புகையிலை மற்றும் நிக்கோடின் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்த 2026 ஆம் ஆண்டு மே 31 அன்று உலக புகையிலை எதிர்ப்பு தினம் உலகளவில் அனுசரிக்கப்படுகிறது.
    • 2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு, "Unmask the Appeal: Countering Tobacco and Nicotine Addiction" என்பதாகும்.
  • செரிமான ஆரோக்கியம் மற்றும் செரிமானக் கோளாறுகள் குறித்த விழிப்புணர்வை மேம்படுத்த ஒவ்வொரு ஆண்டும் மே 29 அன்று உலக செரிமான ஆரோக்கிய தினம் அனுசரிக்கப்படுகிறது.
    • 2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு, "Chronic Diarrhea: Don't Flush the Signs Away" என்பதாகும்.
  • எவரெஸ்ட் சிகரத்தில் வெற்றிகரமாக ஏறிய முதல் பயணத்தின் 73-வது ஆண்டு நினைவு தினத்தைக் குறிக்கும் வகையில் 2026 ஆம் ஆண்டு மே 29 அன்று சர்வதேச எவரெஸ்ட் தினம் அனுசரிக்கப்பட்டது.
    • 1953 ஆம் ஆண்டு மே 29 அன்று எட்மண்ட் ஹிலாரி மற்றும் டென்சிங் நோர்கே ஆகியோர் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் மலையேறுபவர்கள் ஆவர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்