உள்நாட்டு மற்றும் சர்வதேசச் சந்தைகளில் புவிசார் குறியீடு (GI) பெற்ற தனது 'ராணி அன்னாசிப்பழத்தை' மேம்படுத்துவதற்காக, திரிபுரா மாநிலம் ₹236 கோடி மதிப்பீட்டில் ராணி அன்னாசி திட்டத்தை தொடங்கியுள்ளது.
திரிபுராவின் ராணி அன்னாசிப் பழமானது 2018 ஆம் ஆண்டில் புவிசார் குறியீட்டைப் பெற்றது.
இந்தியாவின் முதல் ஸ்கைகாஸ்ட் அமைப்பானது, புவி அறிவியல் அமைச்சகத்தால் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் தொடங்கி வைக்கப்பட்டது.
இதனை நிறுவியதன் மூலம், விமானப் போக்குவரத்துச் செயல்பாடுகளுக்கு நிகழ்நேர வானிலை நுண்ணறிவை வழங்கும் ஒருங்கிணைந்த வளிமண்டல தொலை உணர்வு அமைப்பான ஸ்கைகாஸ்ட் அமைப்பை நிறுவிய 19-வது நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.
பார்தி ஏர்டெல் நிறுவனமானது, நுகர்வோரை மையமாகக் கொண்ட இந்தியாவின் முதல் 5G வலையமைப்பு பிளவாக்கச் சேவையான முன்னுரிமை Postpaid திட்ட' சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
5G வலையமைப்பு பிளவாக்கம் என்பது, குறிப்பிட்ட பயனர்கள் அல்லது பயன்பாடுகளுக்கான பிரத்தியேக வளங்களுடன் கூடிய பல மெய்நிகர் வலை அமைப்புகளாக (பிளவாக்கங்கள்) ஒற்றை 5G வலையமைப்பைப் பிரிப்பதாகும்.
உத்தரப் பிரதேசம் செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான தேர்வு நிர்வாகத்தை அறிமுகப்படுத்தியுள்ளதுடன், வெளிப்படைத்தன்மை மற்றும் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில், டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் (AKTU) வருகைப் பதிவு மற்றும் இருக்கை ஏற்பாடுகளுக்காக செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் ஒரு அமைப்பையும் தொடங்கியுள்ளது.
குழந்தைகளை வளர்ப்பதிலும் பாதுகாப்பதிலும் பெற்றோரின் பங்கை அங்கீகரிக்கும் வகையிலும், அவர்களைக் கௌரவிப்பதற்காகவும் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 1 அன்று உலக பெற்றோர் தினம் அனுசரிக்கப்படுகிறது.
2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு “Together for Parents” என்பதாகும்.