TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

June 12 , 2026 4 days 80 0
  • NPCI இன்டர்நேஷனல் பேமெண்ட்ஸ் லிமிடெட் (NIPL) மற்றும் அக்லேடா (ACLEDA) வங்கி ஆகியவை KHQR தளம் மூலம் கம்போடியாவில் எல்லை தாண்டிய UPI (ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம்) பணப்பரிவர்த்தனை சேவையைத் தொடங்கியுள்ளன.
    • சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம் (UAE), பிரான்ஸ், மொரிஷியஸ், நேபாளம், பூடான், கத்தார் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளைத் தொடர்ந்து UPI சேவைகளைப் பயன்படுத்தும் 9-வது நாடாக கம்போடியா மாறியுள்ளது.
  • பிரான்சின் பாரிஸ் நகரில் நடைபெற்ற 125-வது பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில், ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் மற்றும் மகளிர் ஒற்றையர் பிரிவில் ரஷ்யாவின் மிரா ஆண்ட்ரீவா ஆகியோர் சாம்பியன் பட்டம் வென்றனர்.
  • கர்நாடகாவிலிருந்து நியூசிலாந்திற்கு, மூலிகைச் சத்துக்கள் சேர்க்கப்பட்ட மற்றும் சமைக்கத் தயாரான நிலையில் உள்ள சிறுதானிய அடிப்படையிலான சிறப்பு உணவுப் பொருட்களை, கடல் வழியாக ஏற்றுமதி செய்வதற்கான முதல் முயற்சியை APEDA (விவசாய மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம்) முன்னின்று செயல்படுத்தியது.
  • புனேவைச் சேர்ந்த Fortytwo Labs உருவாக்கியுள்ள இந்தியாவின் முதல் உள்நாட்டு குவாண்டம்-பாதுகாப்பான நெறிமுறையானது, இந்தியத் தரவுப் பாதுகாப்பு சபையிடம் (DSCI) இருந்து C-SAFE (குறியாக்கப் பாதுகாப்பு மதிப்பீடு மற்றும் செயல்பாட்டு மதிப்பாய்வு) அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.
    • மும்பையில் நடைபெற்ற FINSEC 2026 நிகழ்வில் அறிவிக்கப்பட்ட இந்த அங்கீகாரம் DSCI ஆல் உருவாக்கப்பட்ட இந்தியாவின் முதல் சுதந்திரமான குறியாக்கவியல் மதிப்பீட்டுத் திட்டமாகும்.
  • அமெரிக்காவின் கன்சாஸ் மாகாணத்தில் உள்ள ஃபோர்ட் லீவன்வொர்த்தில் நடைபெற்ற அமெரிக்க ராணுவ கமாண்ட் மற்றும் ஜெனரல் ஸ்டாஃப் ஆபீசர் கோர்ஸில் (CGSOC) இந்திய ராணுவத்தைச் சேர்ந்த படைத் தலைவர் பிரபாத் மிஸ்ரா அவர்கள் இரண்டு கல்வி விருதுகளை வென்றுள்ளார்.
    • பட்டமளிப்பு விழாவின் போது, பியரர்-ப்ரூக்ஸ் விருது மற்றும் ஜெனரல் டக்ளஸ் மாக்ஆர்தர் ராணுவத் தலைமைத்துவ எழுத்து விருது ஆகியவற்றை அவர் பெற்றார்.
  • கேரளாவில் ஆண்டு முழுவதும் பயிரிட ஏற்ற, புதர் வகையைச் சேர்ந்த 'KAU தேஜஸ்வினி' என்ற புதிய பச்சை மிளகாய் ரகத்தை கேரள வேளாண் பல்கலைக்கழகம் (KAU) வெளியிட்டு உள்ளது.
  • தரம், பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மையை உறுதி செய்வதில் அங்கீகாரத்தின் முக்கியத்துவத்தை மேம்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 9 அன்று உலக அங்கீகார தினம் (WAD) உலகளவில் அனுசரிக்கப்படுகிறது.
    • 2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு "Innovation, Trust and Sustainability: The Power of Accreditation" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்