தமிழ்நாட்டின் முதலமைச்சர் 2026 ஆம் ஆண்டு ஜூன் 9 அன்று சென்னையில் சிங்கப்பெண் சிறப்புப் படையை தொடங்கி வைத்தார்.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க உதவும் வகையில் இந்தச் சிறப்புப் படை உருவாக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் முதல் கட்டத்திற்காக மாநில அரசு ₹354 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது.
இப்படையானது காவல் துறைத் தலைவர் (IGP) கே. பவானீஸ்வரி தலைமையில் செயல்படும்.
இதன் இரண்டாம் கட்டத்தில், 2,500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும். மேலும் இப்படைக்கு வாகனங்கள், ஆளில்லா விமானங்கள் மற்றும் நவீன தொழில்நுட்ப உபகரணங்கள் வழங்கப்படும்.
இந்த சிறப்புப் படை குற்றத் தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் என எதிர்பார்க்கப்படுவதோடு அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் விசாரணைகள் மற்றும் குற்றவாளிகள் மீதான சட்ட நடவடிக்கைகளில் அதிக கவனம் செலுத்த வழி வகுக்கும்.