லடாக்கின் லேயில் உள்ள ஹெமிஸ் மடாலயத்தில் ஹெமிஸ் திருவிழா 2026 தொடங்கியதுடன், திபெத்திய சந்திர நாட்காட்டியின் செ-சு (Tse-Chu) மாதத்தின் 10 வது நாளில் குரு பத்மசம்பவாவின் (குரு ரின்போச்சே) பிறந்த நாளைக் குறிக்கும் வகையில் இது ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.
சிறுபான்மையினர் விவகார அமைச்சகமானது 2026 ஆம் ஆண்டு ஜூன் 22 அன்று ஹஜ் கொள்கை 2027-ஐ அறிவித்ததுள்ள நிலையில், இந்திய ஹஜ் குழு (HCoI) இணையதளம் மற்றும் ஹஜ் சுவிதா செயலி மூலம் விண்ணப்பங்கள் திறக்கப்பட்டுள்ளன.
ஹஜ் என்பது சவுதி அரேபியாவின் மக்காவிற்கான வருடாந்திர புனிதப் பயணம் ஆகும், மேலும் இது இஸ்லாத்தின் ஐந்து தூண்களில் ஒன்றாகும்.
மத்தியப் பிரதேசத்தில், இந்தூரின் மால்வி உருளைக்கிழங்கு, ரத்லாமின் கராடு (ஒரு வகை கிழங்கு) மற்றும் பாலம் கக்டி (வெள்ளரி), மாண்டுவின் (தார் மாவட்டம்) புகழ்பெற்ற பாபாப் (Baobab) மரப் பழம் ஆகியவற்றிற்கு புவிசார் குறியீடு (GI) வழங்கப் பட்டுள்ளது.
அர்ஜென்டினாவின் படகோனியாவில் உள்ள குட்ரல் கோ நகரில் கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸியின் 85 அடி உயர சிலை திறக்கப்பட்டுள்ளதுடன் இது கொல்கத்தாவில் (மேற்கு வங்கம்) முன்பு நிறுவப்பட்ட 70 அடி சிலையை விஞ்சி, உலகின் மிக உயரமான மெஸ்ஸி சிலையாக மாறியுள்ளது.
நிபே லிமிடெட் நிறுவனம் உருவாக்கிய, இந்தியாவின் மிகவும் கனமான உள்நாட்டு 120-மிமீ வாகனத்தில் பொருத்தப்பட்ட மின்னியற்றி அமைப்பான 'கருடாஸ்த்ரா' மத்தியப் பிரதேசத்தில் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.
ஆந்திரப் பிரதேசத்தின் பங்கனப்பள்ளி மாம்பழங்களின் 5 மெட்ரிக் டன் சரக்குகளை இந்தியாவிலிருந்து சிங்கப்பூருக்கு கடல் வழியாக வணிக ரீதியாக ஏற்றுமதி செய்வதற்கு வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (APEDA) வசதி செய்துள்ளது.
பங்கனப்பள்ளி (பெனிஷான்) என்பது ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த 2017 ஆம் ஆண்டில் புவிசார் குறியீட்டைப் (GI) பெற்ற ஒரு பிரீமியம் மாம்பழ வகையாகும்.
அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யில் நடைபெற்ற 2வது பாக்ஸ் சிலிக்கா உச்சி மாநாட்டில் இந்தியா உட்பட 35 நாடுகள் செயற்கை நுண்ணறிவு வாய்ப்புகள் குறித்த கூட்டறிக்கையில் கையெழுத்திட்டன.
இந்த அறிக்கை புதுமையான AI நிர்வாகம், நம்பகமான விநியோகச் சங்கிலிகள் மற்றும் AI தொடர்பான தொழில்நுட்பங்களுக்கான வலுவான தொழில்துறை திறன் ஆகியவற்றை ஊக்குவிக்கிறது.