TNPSC Thervupettagam

தேசியப் புள்ளியியல் தினம் 2026 - ஜூன் 29

June 30 , 2026 5 days 144 0
  • இந்தியாவின் நவீனப் புள்ளியியலின் தந்தை என்று அழைக்கப்படும் பேராசிரியர் பிரசாந்த சந்திர (பி.சி.) மகாலனோபிஸ் அவர்களின் பிறந்தநாளைக் குறிக்கும் வகையில் இந்நாள் அனுசரிக்கப்படுகிறது.
  • திட்டமிடல், ஆளுகை மற்றும் கொள்கை உருவாக்கத்தில் புள்ளியியலின் முக்கியத்துவத்தை ஊக்குவிப்பதற்காக இந்நாள் 2007-ஆம் ஆண்டு முதல் அனுசரிக்கப் படுகிறது.
  • இந்நாள் மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் (MoSPI) மற்றும் தேசியப் புள்ளியியல் அலுவலகம் (NSO) ஆகியவற்றால் ஏற்பாடு செய்யப்படுகிறது.
  • பி.சி. மகாலனோபிஸ் 1931-ஆம் ஆண்டில் இந்தியப் புள்ளியியல் நிறுவனத்தை (ISI) நிறுவினார்; மேலும் 1950-ஆம் ஆண்டில் தேசிய மாதிரி ஆய்வை (NSS) நிறுவினார்.
  • அவர் மகாலனோபிஸ் தொலைவு (D² Statistic) மற்றும் இந்தியாவின் இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்திற்கு வழிகாட்டிய மகாலனோபிஸ் மாதிரி ஆகியவற்றை உருவாக்கினார்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்