இந்தியத் தடகள விளையாட்டிற்கான பங்களிப்புகளை அங்கீகரிக்கும் வகையில், இந்தியத் தடகளச் சம்மேளனம் (AFI) புதுதில்லியில் முதல்முறையாக இந்தியத் தடகள விருதுகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த விருதுகள் தடகள வீரர்கள், பயிற்சியாளர்கள், தொழில்நுட்ப அதிகாரிகள், மாநிலச் சங்கங்கள், ஆதரவாளர்கள் மற்றும் ஆதரவளிக்கும் நிறுவனங்களை அங்கீகரிக்கின்றன.
2025-ஆம் ஆண்டின் சிறந்த ஆண் தடகள வீரர், சிறந்த பெண் தடகள வீராங்கனை, சிறந்த பயிற்சியாளர் மற்றும் சிறந்த மாநிலச் சங்கம் உட்பட மொத்தம் 10 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படும்.
தடகள விளையாட்டிற்கு நீண்டகாலப் பங்களிப்பை வழங்கிய நபர்களுக்கு மூன்று வாழ்நாள் சாதனையாளர் விருதுகளும் வழங்கப்படும்.
அனைத்து நிலைகளிலும் செயல்பாடுகள் மற்றும் ஆதரவை அங்கீகரிப்பதன் மூலம் இந்தியாவின் விளையாட்டுச் சூழலமைப்பை வலுப்படுத்துவதை இந்த முன்னெடுப்பு நோக்கமாகக் கொண்டுள்ளது.