TNPSC Thervupettagam

புத்தர் பரிநிர்வாணத் தூண் – தெலங்கானா

June 30 , 2026 5 days 87 0
  • தெலங்கானாவின் அதிலாபாத் மாவட்டத்தில் உள்ள பீம்சாரி கிராமத்தில் புத்தர் பரி நிர்வாணச் சிற்பத்துடன் கூடிய அரிய நான்கு முகக் கல்தூண் கண்டெடுக்கப் பட்டு உள்ளது.
  • பொது ஆண்டு (CE) 10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இத்தூண், பௌத்த, வைணவ மற்றும் சைவச் சிற்பங்களை ஒரே நினைவுச் சின்னத்தில் ஒருங்கிணைத்துத் திகழ்கிறது.
  • இதன் நான்கு பக்கங்களிலும் புத்தர் பரிநிர்வாணம், விஷ்ணு சயன மூர்த்தி, ஒரு வீரமிக்க போர்வீரன் மற்றும் உமா லிங்கன மூர்த்தி ஆகியோரின் உருவங்கள் சித்தரிக்கப் பட்டுள்ளன.
  • பரிநிர்வாணம் என்பது உத்தரப் பிரதேசத்தின் குஷிநகரில் கௌதம புத்தர் இறுதியாக முக்தி அடைந்ததைக் குறிக்கிறது.
  • இந்தக் கண்டுபிடிப்பு தெலங்கானாவில் அறியப்பட்ட இவ்வகையான முதல் நினைவுச் சின்னமாகும் என்ற நிலையில் இது இடைக்காலத் தக்காணத்தில் பல மத மரபுகளின் சக வாழ்வை எடுத்துக்காட்டுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்