TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

July 3 , 2026 5 days 96 0
  • 7.2 முதல் 7.5 வரையிலான ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பெரும் சேதம் மற்றும் உயிர்ச்சேதங்கள் ஏற்பட்ட வெனிசுலாவில் அமிஸ்டாட் நடவடிக்கை எனும் திட்டத்தின் கீழ் செயல்படும் இந்திய ராணுவத்தின் கள மருத்துவமனை முழுமையாகச் செயல்படத் தொடங்கி, 24×7 இலவச மருத்துவ சேவைகளை வழங்கி வருகிறது.
  • 2026 ஆம் ஆண்டிற்கான தேசிய ஊரக வளர்ச்சி மாநாடு ஜூன் 28-29 ஆகிய தேதிகளில் புது தில்லியில் நடைபெற்றதுடன் இதில் ஊரக வளர்ச்சிக்கான முக்கியத் திட்டங்கள் மதிப்பாய்வு செய்யப்பட்டதுடன் முழுமையான ஊரக வளர்ச்சி குறித்தும் விவாதிக்கப் பட்டது.
  • எண்ம வானிலை முன்னறிவிப்பு (NWP), செயற்கைக்கோள் தரவு ஒருங்கிணைப்பு மற்றும் உலகளாவிய வானிலை முன்னறிவிப்புகளின் துல்லியத்தை மேம்படுத்தச் செய்வதில் சிறந்தப் பங்களிப்பை வழங்கியதற்காக, பிரெஞ்சு வானிலை ஆய்வாளர் டாக்டர் புளோரன்ஸ் ராபியர் உலக வானிலை அமைப்பின் (WMO) 2026 ஆம் ஆண்டிற்கான சர்வதேச வானிலை அமைப்பு (IMO) பரிசைப் பெற்றார்.
  • சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் விளையாட்டுக் கூட்டமைப்பின் (ISSF) 2026 ஆம் ஆண்டிற்கான ஜூனியர் உலக சாம்பியன்ஷிப்பில், 7 தங்கம், 8 வெள்ளி மற்றும் 10 வெண்கலம் என மொத்தம் 25 பதக்கங்களை வென்று இந்தியா பதக்கப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது.
  • தேசிய மின் பாதுகாப்பு வாரம் 2026 ஆனது தமிழ்நாட்டில் மின்சாரத் துறையால் ஜூன் 26 முதல் ஜூலை 2 வரை அனுசரிக்கப்படுகிறது.
    • "இன்றைய விழிப்புணர்வு, நாளைய பாதுகாப்பு" என்ற கருத்துருவின் கீழ் இந்த விழிப்புணர்வுப் பிரச்சாரம் நடத்தப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்