TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

August 14 , 2026 5 days 61 0
  • கொலம்பியாவின் சோகோவில் உள்ள சான் ஜோஸ் டெல் பால்மர் அருகே 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது, இதில் குறைந்தது 164 பேர் உயிரிழந்தனர் மற்றும் காலி மற்றும் பெரேராவில் பெரும் சேதம் ஏற்பட்டது.
  • தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் உள்ள வ.உ.சிதம்பரனார் துறைமுகம், Scope-2 உமிழ்வற்ற நிலையை அடைந்த இந்தியாவின் முதல் பெரிய துறைமுகமாக உருவெடுத்துள்ளது.
    • 2025-26 ஆம் ஆண்டில் அதன் மின்சாரத் தேவைகளில் 93.89 சதவீதத்தை புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பூர்த்தி செய்தது, மேலும் இத்துறைமுகம் ISO 50001:2018 ஆற்றல் மேலாண்மை அமைப்புச் சான்றிதழைப் பெற்ற முதல் இந்தியப் பெருந்துறைமுகமாக மாறியது.
  • இந்திய தொழில்நுட்பக் கழகம் டெல்லியின் சோனிபட் வளாகத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் இயங்கும் உயர் செயல்திறன் கொண்ட கணினி வசதியான 'பரம் பிரக்யா' (Param Pragya) என்பதை இந்தியப் பிரதமர் திறந்து வைத்தார்.
  • தமிழ்நாட்டின் கொல்லிமலையில், டெரிடேசி குடும்பம் மற்றும் டெரிஸ் பேரினத்தைச் சேர்ந்த 'டெரிஸ் மதுசூதனனி' (Pteris madhusoodananii) என்ற புதிய பெரணி இனம் கண்டுபிடிக்கப்பட்டது.
  • டிரினிடாட் மற்றும் டொபாகோவைச் சேர்ந்த மற்றும் ஸ்டீல் டிரம் என்று அழைக்கப் படும் இசைக்கருவியான ஸ்டீல்பேனின் கலாச்சார பாரம்பரியத்தை மேம்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 11 அன்று உலக ஸ்டீல்பேன் தினம் அனுசரிக்கப்படுகிறது.
    • 2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு "Rhythm and Rise: Youth. Discipline. Culture. Community." என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்