கர்நாடகாவின் மூகாம்பிகா வனவிலங்கு சரணாலயத்தில் இருந்து 'காடியானா கர்நாடகா' (Ghatiana karnataka) என்ற புதிய நன்னீர் நண்டு இனம் அறிவியல் பூர்வமாக கண்டறியப்பட்டுள்ளது.
காடியானா கர்நாடகா என்பது மேற்குத் தொடர்ச்சி மலையில் பதிவு செய்யப்பட்ட காடியானா பேரினத்தின் 15 வது இனமாகும், மேலும் இது கர்நாடகாவில் மட்டுமே காணப் படக்கூடிய இனங்களில் ஒன்றாகும்.
பாதுகாப்பு உற்பத்தித் துறையின் கீழ் உள்ள இந்தியா ஆப்டெல் லிமிடெட் (IOL) நிறுவனமானது, டேராடூனில் உள்ள ஆயுதத் தொழிற்சாலையால் உருவாக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 'கருட்' (GARUD) உயர் திறன் கொண்ட தொலைநோக்கிகளை குடிமக்கள் வணிகம் செய்யும் சந்தைக்காக அறிமுகப் படுத்தியுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த Together AI நிறுவனத்திற்காக NVIDIA B300-ஐ அடிப்படையாகக் கொண்ட செயற்கை நுண்ணறிவுத் தொழிற்சாலையைக் கொண்ட இந்தியாவின் மிகப்பெரிய ஒற்றைத் தொகுப்பு செயற்கை நுண்ணறிவு (AI) உள்கட்டமைப்பு வசதியை சென்னையில் அமைப்பதற்காக லார்சன் அண்ட் டூப்ரோ (L&T) நிறுவனம் ₹10,000–15,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளது.
லிபியாவின் பெங்காசி நகரில் நடைபெற்ற கின்னஸ் உலக சாதனை ஸ்கைடைவிங்கில், 38 நாடுகளைச் சேர்ந்த 65 ஸ்கைடைவர்களுடன் இந்தியாவைச் சேர்ந்த மூன்று ஸ்கைடைவர்களான ஜம்ஷீர் தனலோட் (கேரளா), அபிஷேக் ராவத் (உத்தரப் பிரதேசம்) மற்றும் இஷா ராஜ் (பீகார்) ஆகியோர் பங்கேற்றனர்.
சென்னையைச் சேர்ந்த அஹீசா டிஜிட்டல் இன்னோவேஷன்ஸ் (Aheesa Digital Innovations) நிறுவனம், மேம்பட்ட கணினி மேம்பாட்டு மையத்தால் (C-DAC) உருவாக்கப்பட்ட 64-பிட் வேகா (VEGA) செயலியால் இயக்கப்படும் மற்றும் RISC-V கட்டமைப்பில் உருவாக்கப்பட்ட உள்நாட்டு அகலப்பட்டை சிஸ்டம்-ஆன்-சிப் (SoC) 'விஹான்'-க்கான (VIHAAN) முதல்-கட்ட சிலிக்கான் வெற்றியை (first-pass silicon success) எட்டியுள்ளது.
இந்தியாவின் முதல் மெய்நிகர் உயிரியல் பூங்காவானது, 14-D சினிமா மற்றும் மெய்நிகர் காடுகளின் வனவிலங்கு உலா ஆகியவற்றுடன் மத்தியப் பிரதேசத்தில் உள்ள இந்தூர் உயிரியல் பூங்காவில் திறக்கப்பட்டுள்ளது.
இணையப் பாதுகாப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவுத் திறன்களை மேம்படுத்துவதற்காக, தேசிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் (NIELIT) 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று சைபர் குஷ்தி 2026 (CYBER KUSHTI 2026) ஹேக்கத்தானைத் தொடங்கியது.
தேசிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் (NIELIT) என்பது மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் (MeitY) கீழ் செயல்படும் ஒரு தன்னாட்சி அறிவியல் அமைப்பாகும்.