மத்திய அரசால் 2026 ஆம் ஆண்டிற்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த தென்காசியின் எம். தங்கராஜ் மற்றும் மதுரை கேந்திரிய வித்யாலயா எண் 2-இன் தலைமையாசிரியை ஜெ. அமுதா ஆகிய இரண்டு ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
தங்கராஜ் பள்ளி உள்கட்டமைப்பை மேம்படுத்தி, செயல்பாடு சார்ந்த கற்றலை அறிமுகப் படுத்தினார்; அதேவேளையில் அமுதா கேந்திரிய வித்யாலயா சங்கதனில் (KVS) தனது பணியின் போது கல்வி மற்றும் தேசிய மாணவர் படை (NCC) செயல்பாடுகளை ஊக்குவித்துள்ளார்.
இந்திய ராணுவத்தின் பிராந்திய ராணுவம் (TA), சைபர்பீஸ் (CyberPeace) அமைப்புடன் இணைந்து, உள்நாட்டு இணையப் பாதுகாப்புத் தீர்வுகளை உருவாக்குவதற்கும், இந்தியாவின் இணையப் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கும் தேசிய அளவிலான பாதுகாப்பு ஹேக்கத்தானான டெரியர் சைபர் குவெஸ்ட்டின் 3வது பதிப்பை (TCQ 3.0) தொடங்கியுள்ளது.
கலிபோர்னியாவில் நடைபெற்ற சிறப்புத் தேர்தலில் ஆயிஷா வஹாப் வெற்றி பெற்று, அமெரிக்க (US) காங்கிரஸுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் ஆப்கானிய-அமெரிக்கர் ஆனார்.
1946 ஆம் ஆண்டில் முஹம்மது அலி ஜின்னாவை பரிசோதித்ததில் மும்பையைச் சேர்ந்த பார்சி மருத்துவர்களான டாக்டர் ஜல் ரத்தன்ஜி படேல் (பொதுநல மருத்துவர்) மற்றும் டாக்டர் ஜல் தபோ-கூ (கதிரியக்க நிபுணர்) ஆகியோரின் பங்களிப்பிற்காக, பாகிஸ்தானின் உயரிய சிவிலியன் விருதான நிஷான்-இ-இம்தியாஸ் விருதுக்கு பாகிஸ்தான் அவர்களைப் பரிந்துரைத்துள்ளது.
முதியோர்களின் பங்களிப்பை அங்கீகரிப்பதற்கும், அவர்களின் கண்ணியம், நல்வாழ்வு மற்றும் உரிமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் வேண்டி ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 21 அன்று உலக மூத்த குடிமக்கள் தினம் அனுசரிக்கப் படுகிறது.
மதம் அல்லது நம்பிக்கையின் அடிப்படையில் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களை நினைவு கூரவும், அவர்களின் மனித உரிமைகளைப் பாதுகாக்கவும், சகிப்புத்தன்மை, பல்சமய உரையாடல் மற்றும் அமைதியான சகவாழ்வை மேம்படுத்த மதம் அல்லது நம்பிக்கையின் அடிப்படையிலான வன்முறை செயல்களால் பாதிக்கப் பட்டவர்களை நினைவு கூரும் சர்வதேச தினம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 22 அன்று அனுசரிக்கப் படுகிறது.