TNPSC Thervupettagam

இடைத்தேர்தல் தடை - சென்னை உயர்நீதிமன்றம்

August 26 , 2026 10 hrs 0 min 18 0
  • தமிழ்நாட்டின் ஐந்து சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் வழக்குகள் முடிவடையும் வரை அங்கு இடைத்தேர்தல் நடத்தப்பட மாட்டாது என இந்தியத் தேர்தல் ஆணையம் (ECI) சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
  • திருச்சி கிழக்கு, பெருந்துறை, அம்பாசமுத்திரம், விராலிமலை மற்றும் கரூர் ஆகியவையே அந்தத் தொகுதிகளாகும்.
  • இந்த ஐந்து தொகுதிகளிலும் தேர்தல் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. அதில் மனுதாரர்கள் தங்களைத் தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்களாக அறிவிக்கவும் கோரி உள்ளனர்.
  • 1951 ஆம் ஆண்டின் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 84 மற்றும் பிரிவு 151-A ஆகியவற்றுடன் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளையும் இந்தியத் தேர்தல் ஆணையம் மேற்கோள் காட்டியுள்ளது.
  • இடைத்தேர்தல் குறித்த அறிவிப்பை வெளியிட இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு விதிக்கப் பட்டிருந்த இடைக்காலத் தடையை 2026 ஆம் ஆண்டு செப்டம்பர் 8 வரை சென்னை உயர் நீதிமன்றம் நீட்டித்துள்ளது.
  • 2026 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலைத் தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்கள் ராஜினாமா செய்ததால் இந்த ஐந்து இடங்களும் காலியாகின.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்