தமிழ்நாடு சட்டமன்ற விதி 55 மற்றும் விதி 56-இன் கீழ் சமர்ப்பிக்கப்படும் முன்னறிவிப்புகள் ஏற்கப்படுவதற்கு முன்பு, அவற்றை உறுப்பினர்களும் ஊடகங்களும் வெளியிடுவதற்கு சட்டமன்ற சபாநாயகர் தடை விதித்துள்ளார்.
விதி 55 என்பது விவாதத்திற்காக எழுப்பப்படும் பிரச்சினைகளைக் கையாள்கிறது. அதேவேளையில் விதி 56 ஒத்திவைப்புத் தீர்மானங்களைக் குறிக்கிறது.
உறுப்பினர்கள் ஒப்புதல் பெறுவதற்கு முன்னதாகவே இத்தகைய முன்னறிவிப்புகளை ஊடகங்களுடனும் சமூக ஊடகங்களிலும் பகிர்வதாக சபாநாயகர் தெரிவித்தார்.
விதி 36(5)-இன் படி, ஒரு முன்னறிவிப்பானது சபாநாயகரால் ஏற்கப்பட்டு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சுற்றறிக்கையாக அனுப்பப்படும் வரை அதனை வெளியிடக் கூடாது.
ஊடகங்களும் இத்தகைய முன்னறிவிப்புகள் ஒப்புதல் பெறுவதற்கு முன்பு அவற்றை வெளியிட வேண்டாம் என சபாநாயகர் கேட்டுக் கொண்டுள்ளார்.