TNPSC Thervupettagam

அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் LPG திட்டம்

August 26 , 2026 10 hrs 0 min 49 0
  • தமிழ்நாடு அரசானது அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டத்தை 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24 அன்று மாநில சட்டமன்றத்தில் அறிவித்ததோடு இத்திட்டம் 2027 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் பொங்கல் திருநாளன்று தொடங்கப்பட உள்ளது.
  • இத்திட்டத்தின் கீழ், தகுதியான குடும்பங்களுக்கு வீட்டு உபயோக திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு (LPG) சிலிண்டர்களுக்கான தொகை திருப்பி வழங்கப் படுவதுடன் இத்தொகை நேரடிப் பலன் பரிமாற்றம் (DBT) மூலம் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக மாற்றப்படும்.
  • ஆண்டு வருமானம் ₹2.5 லட்சத்திற்கும் குறைவாக உள்ள குடும்பங்கள், நடுத்தர மற்றும் குறு விவசாயிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளைக் கொண்ட குடும்பங்கள் இதற்குத் தகுதியானவர்கள்.
  • இத்திட்டத்திற்கு ஆண்டுக்கு ₹4,000 கோடி நிதியொதுக்கீடு தேவைப்படும் என மதிப்பிடப் பட்டுள்ளது.
  • இது தமிழ்நாட்டின் பொது விநியோக மற்றும் நலத் திட்டக் கட்டமைப்புடன் இணைக்கப் பட்டுள்ளதுடன் குடும்பங்களின் சமையல் எரிபொருள் செலவுகளைக் குறைப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்