தமிழ்நாட்டில் இலவச பேருந்துப் பயணத் திட்ட விரிவாக்கம்
August 26 , 2026 26 days 134 0
2026 ஆம் ஆண்டு அக்டோபர் 2 (காந்தி ஜெயந்தி) முதல் பல வகையான பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பேருந்துப் பயணத்தை வழங்குவதற்காக 'வெற்றிப் பயணம்' திட்டத்தை விரிவுபடுத்துவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
விரிவாக்கப்பட்ட இத்திட்டத்தின் கீழ் விரைவுப் பேருந்துகள், குறைந்த நிறுத்தங்களைக் கொண்ட பேருந்துகள் (LSS), டீலக்ஸ்/உயர்தரப் பேருந்து மற்றும் புறநகர் பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாகப் பயணம் செய்யலாம்.
முன்னதாக, நகரங்கள் மற்றும் நகராட்சிப் பகுதிகளில் இயக்கப்படும் சாதாரணப் பேருந்துகளிலும், 40 கி.மீ வரையிலான மலைப்பாதை வழித்தடங்களிலும் மட்டுமே பெரும்பாலும் இலவசப் பயணம் கிடைத்தது.
இதற்கு வருமான வரம்போ அல்லது வேறு கட்டுப்பாடுகளோ இல்லை என்பதோடு மேலும், திருநங்கைகளும் இத்திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த விரிவாக்கத் திட்டத்தினால் தமிழ்நாடு அரசுக்கு ஆண்டுக்கு சுமார் ₹6,000 கோடி செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.