வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்ததை அடுத்து, மகாராஷ்டிராவின் நாசிக்கில் இருந்து டெல்லி, சென்னை, கொச்சி மற்றும் கவுஹாத்தி போன்ற முக்கிய நுகர்வு மையங்களுக்கு வெங்காயத்தை கொண்டு செல்வதற்காக ஒன்றிய அரசு காண்டா எக்ஸ்பிரஸ் (Kanda Express) என்ற சரக்கு ரயிலை அறிமுகப்படுத்தியுள்ளது.
நாசிக்கில் உள்ள லாசல்கான் (Lasalgaon) ஒரு முக்கிய வெங்காய வர்த்தக மையம் ஆகும், அதே நேரத்தில், விலை ஏற்ற இறக்கங்களைக் கட்டுப்படுத்துவதற்கான இடையக இருப்புக்காக (buffer stock) NAFED (இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு) மற்றும் NCCF (இந்திய தேசிய நுகர்வோர் கூட்டுறவுக் கூட்டமைப்பு) ஆகியவை சுமார் 1.2 லட்சம் டன் வெங்காயத்தை கொள்முதல் செய்துள்ளன.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற அழகிப் போட்டியில் கேரளாவைச் சேர்ந்த கசியா லிஸ் மெஜோ (Kaziah Liz Mejo) 2026 ஆம் ஆண்டிற்கான மிஸ் யுனிவர்ஸ் இந்தியா பட்டத்தை வென்றார்.
அடிமை வியாபாரம் மற்றும் அதை ஒழிப்பதற்கான போராட்டத்தை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 23 அன்று சர்வதேச அடிமை வியாபாரம் மற்றும் அதன் ஒழிப்பு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.
புகழ்பெற்ற ஹாக்கி வீரர் மேஜர் தியான் சந்தின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 29 அன்று தேசிய விளையாட்டு தினம் அனுசரிக்கப்படுகிறது.
2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு Khelega Bharat, Jeetega Bharat என்பதாகும்.