இந்திய தொழில்நுட்பக் கழக (IIT) டெல்லி ஆராய்ச்சியாளர்கள் இந்தியாவின் முதல் செயல்படும் உள்நாட்டு micro-GPU-வை (வரைகலைச் செயலாக்க அமைப்பு) உருவாக்கி உள்ள நிலையில் இது படங்கள் மற்றும் வரைகலைகளைச் செயலாக்கப் பயன்படுகிறது.
தொழில்நுட்ப மேம்பாட்டு நிதி (TDF) திட்டத்தின் கீழ், ராஜஸ்தானை தளமாகக் கொண்ட புத்தொழில் நிறுவனமான ஜீரோ mK இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் DRDO தனது முதல் அதிக மதிப்புள்ள ஆழ்-தொழில்நுட்ப திட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
இந்திய விமானப்படையின் (IAF) பன்னாட்டு விமானப் பயிற்சியான தரங் சக்தியின் இரண்டாவது பதிப்பு ராஜஸ்தானின் ஜோத்பூரில் நடைபெறுகிறது, இதில் ஆஸ்திரேலியா, பங்களாதேஷ், பிரான்ஸ், ஜெர்மனி, கிரீஸ், இலங்கை, ஐக்கிய அரபு அமீரகம் (UAE) மற்றும் அமெரிக்கா (USA) ஆகிய எட்டு நாடுகள் விமான படைகளுடன் பங்கேற்கின்றன.
இந்தியாவின் விண்வெளி சூழ்நிலை விழிப்புணர்வை (SSA) வலுப்படுத்துவதற்காக NETRA திட்டத்தின் கீழ் அசாமின் சந்திராபூரில் மேம்பட்ட ரேடார் ஆராய்ச்சி மையத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) நிறுவுகிறது.
மிசோரமைச் சேர்ந்த விவசாயியான ZT லால்ரிதாங்கி, பை மாரி-ஐ என்றும் அழைக்கப் படுபவர், உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் (FAO) வேளாண் உணவு அமைப்புகள் மற்றும் ஊரக மேம்பாட்டுக்கான 100 பெண் வீராங்கனைகள் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்திய கடற்படை மற்றும் பிரெஞ்சு கடற்படைக்கு இடையிலான வருடாந்திர இரு தரப்பு கடற்படைப் பயிற்சியான வருணா (VARUNA) பயிற்சியின் 24-வது பதிப்பில் பங்கேற்பதற்காக இந்தியக் கடற்படையின் INS திரிசூல் பிரான்சின் டூலோன் வந்தடைந்தது.
குஜராத்தில் கல்பசார் திட்டத்தை மேம்படுத்துவதற்காக புது தில்லியில் நடைபெற்ற 9-வது இந்திய சர்வதேச நீர் வாரம் (IIWW) 2026-இன் போது இந்தியாவும் நெதர்லாந்தும் இரண்டு முத்தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் (MoUs) கையெழுத்திட்டன.
நர்மதை நதியின் நீருடன் சபர்மதி, மஹி மற்றும் தாதர் நதிகளின் நீரோட்டத்தைப் பயன்படுத்தி ஒரு நன்னீர் நீர்த்தேக்கத்தை உருவாக்குவதை கல்பசார் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
தனியார் கார்கள் இல்லாத பயணத்தை மேம்படுத்தவும், தூய்மையான மற்றும் பாதுகாப்பான போக்குவரத்தை ஊக்குவிக்கவும் ஆண்டுதோறும் செப்டம்பர் 22 அன்று உலக கார் இல்லாத தினம் அனுசரிக்கப்படுகிறது.