அணு ஆயுதங்களை முற்றிலுமாக ஒழிப்பதற்கான சர்வதேச தினம் 2026 - செப்டம்பர் 26
September 28 , 2026 3 days 64 0
ஐ.நா பொதுச் சபையால் (UNGA) 2013 ஆம் ஆண்டில் இத்தினம் அறிவிக்கப்பட்டு, 2014 ஆம் ஆண்டு முதல் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
அணு ஆயுதங்களால் ஏற்படும் அச்சுறுத்தல் குறித்த பொதுமக்களின் விழிப்புணர்வை அதிகரிப்பதையும் அவற்றை முற்றிலுமாக ஒழிப்பதை ஊக்குவிப்பதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
1946 ஆம் ஆண்டில் ஐ.நா பொதுச் சபையின் முதல் தீர்மானம் அணு ஆயுதக் குறைப்பை ஒரு முக்கிய ஐ.நா இலக்காக அடையாளம் கண்டது.
2026 ஆம் ஆண்டில், உயர் மட்ட முழுமையான கூட்டம் செப்டம்பர் 29 அன்று நியூயார்க்கில் நடைபெறும்.
ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின் (SIPRI) கூற்றுப்படி, 2026 ஆம் ஆண்டில் உலகளவில் சுமார் 12,187 அணு ஆயுதங்கள் உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.