TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

October 17 , 2026 8 days 109 0
  • கொல்கத்தாவில் உள்ள தி வெஸ்டின், ராஜர்ஹட்டில் 2026 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 11 முதல் 18 ஆம் தேதி வரை 19 வது உலக சுடோகு சாம்பியன்ஷிப் மற்றும் 33 வது உலகப் புதிர் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெறுகின்றன.
  • பார்தி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் நிறுவனரும் தலைவருமான சுனில் பார்தி மிட்டலுக்கு பிரான்சின் 'நைட் ஆஃப் தி நேஷனல் ஆர்டர் ஆஃப் தி லெஜியன் ஆஃப் ஹானர்' விருது வழங்கப்பட்டது.
  • உள்ளூரிலேயே எரிபொருளை உற்பத்தி செய்வதற்கும் இறக்குமதியைக் குறைப்பதற்கும் டோர்னோகோபி மாகாணத்தில் உள்ள அல்தான்ஷிரீ சௌம் பகுதியில் மங்கோலியாவின் முதல் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை அமைப்பதற்கு இந்தியா அளித்த ஆதரவிற்கு மங்கோலிய அதிபர் உக்னகீன் குரேல்சுக் நன்றி தெரிவித்தார்.
  • உத்தரப் பிரதேசத்தின் அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்திரத்திற்கு 2026 ஆம் ஆண்டு அக்டோபர் 10 அன்று 'சரியான வழிபாட்டுத் தலத்தில் உணவருந்துதல்' (Eat Right Place of Worship) என்ற முன்னெடுப்பின் கீழ் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் (FSSAI) சான்றிதழ் வழங்கப் பட்டது.
    • இந்த முன்னெடுப்பானது மத நிறுவனங்களில் பிரசாதம் மற்றும் அன்னதானம் தயாரித்து விநியோகிக்கும் போது உணவுப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்துகிறது.
  • தமிழ்நாட்டின் நெல்லை வனவிலங்கு சரணாலயத்தின் மலைச் சரிவுகளில் இந்தியத் தாவரவியல் ஆய்வகத்தின் தாவரவியலாளர்களால் செரோபெஜியா தமிழ்நாடுயென்சிஸ் (Ceropegia tamilnaduensis) என்ற புதிய தாவர இனம் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
    • நெல்லை வனவிலங்கு சரணாலயம் 2015 ஆம் ஆண்டில் வனவிலங்கு சரணாலயமாக அறிவிக்கப்பட்ட இதில் சிவகிரி மலை (1,748 மீ) உட்பட 29 மலைச் சிகரங்களைக் கொண்டுள்ளது.
  • பசி, உணவுப் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியமான உணவிற்கான அணுகல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 16 அன்று உலக உணவு தினம் அனுசரிக்கப்படுகிறது.
    • 2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு Innovate today. Nourish tomorrow என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்