TNPSC Thervupettagam

அப்துல் கலாம் பிறந்த நாள் அனுசரிப்பு 2026

October 16 , 2026 9 days 150 0
  • அறிவியல், கல்வி மற்றும் இளைஞர் மேம்பாட்டிற்கு டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் ஆற்றிய பங்களிப்புகளை கௌரவிக்கும் வகையில் அவரது பிறந்த நாளான அக்டோபர் 15 கொண்டாடப்படுகிறது.
  • டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் 1931 ஆம் ஆண்டு அக்டோபர் 15 அன்று தமிழ்நாட்டில் உள்ள ராமேஸ்வரத்தில் பிறந்தார்.ள்
  • அவர் இந்தியாவின் 2002 முதல் 2007 ஆம் ஆண்டு வரை 11வது குடியரசுத் தலைவராக பதவி வகித்தார்.
  • அவர் பிரபலமாக "இந்தியாவின் ஏவுகணை மனிதர்" என்று அழைக்கப்பட்டார்.
  • அவருக்கு 1997 ஆம் ஆண்டில் இந்தியாவின் மிக உயரிய குடிமக்கள் விருதான பாரத ரத்னா வழங்கப்பட்டது.
  • இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் செலுத்து வாகனமான SLV-3-இன் உருவாக்கத்தை அவர் வழிநடத்தினார்.
  • 1980 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் ரோகிணி செயற்கைக்கோளை SLV-3 வெற்றிகரமாக பூமிக்கு அருகிலுள்ள சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தியது.
  • ஒருங்கிணைந்த வழிகாட்டும் எறிகணை மேம்பாட்டுத் திட்டத்தில் (IGMDP) அவர் முக்கியப் பங்காற்றினார்.
  • அக்னிச் சிறகுகள், இந்தியா 2020 மற்றும் எழுச்சி தீபங்கள் ஆகியவை அவர் எழுதிய நூல்களாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்