TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

November 4 , 2026 3 days 92 0
  • கஜகஸ்தானின் அஸ்தானாவில் நடைபெற்ற 2026 ஆம் ஆண்டிற்கான மூத்தோர் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய மல்யுத்த வீராங்கனைகளான காஜல் தோசக் (76 கிலோ) மற்றும் நீலம் சிரோஹி (50 கிலோ) ஆகியோர் வெள்ளிப் பதக்கங்களை வென்றனர்.
  • முதலாவது காமன்வெல்த் கபடி சாம்பியன்ஷிப் போட்டியானது 2026 ஆம் ஆண்டில் குஜராத்தின் அகமதாபாத்தில் நடைபெற்றது.
  • இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) நிகர டாலர் கொள்முதல் 2026 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் 18.652 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த நிலையில், 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இரு மடங்கிற்கும் மேலாக அதிகரித்து 43.264 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது.
  • தமிழ்நாடு மாநில தலைமை தகவல் ஆணையராக ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி எஸ். நடராஜனை தமிழ்நாடு அரசு நியமித்துள்ளது.
  • 1944 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் வேகன் சொசைட்டி (Vegan Society) நிறுவப்பட்டதைக் குறிக்கும் வகையில், ஆண்டுதோறும் நவம்பர் 1 ஆம் தேதி உலக நனிசைவ/வேகன் தினம் (World Vegan Day) அனுசரிக்கப்படுகிறது.
  • பத்திரிகையாளர்களுக்கு எதிரான குற்றங்களுக்கு நீதி மற்றும் பொறுப்புணர்வை ஊக்குவிக்கவும், பத்திரிகை சுதந்திரம் மற்றும் கருத்து சுதந்திரத்தைப் பாதுகாக்கவும் பத்திரிகையாளர்களுக்கு எதிரான குற்றங்களுக்கான தண்டனையின்மையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான சர்வதேச தினம் ஆண்டுதோறும் நவம்பர் 2 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.   
    • 2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு "Threats Evolve. Impunity Endures” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்