TNPSC Thervupettagam

தமிழ்நாட்டில் சிறப்பு நீதிமன்றங்கள் விரிவாக்கம்

November 4 , 2026 3 days 68 0
  • வழக்கு விசாரணைகளை விரைவுபடுத்துவதற்காக 26 போக்சோ (POCSO) சட்ட நீதிமன்றங்கள் மற்றும் 4 போதைப்பொருள் மற்றும் மனமயக்கப் பொருட்கள் (NDPS) தடுப்புச் சட்ட நீதிமன்றங்களை அமைக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
  • 26 போக்சோ நீதிமன்றங்களில் 12 சிறப்பு நீதிமன்றங்கள் மற்றும் 14 கூடுதல் நீதிமன்றங்கள் அடங்கும், இதற்காக ₹46.59 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • தமிழ்நாட்டில் ஏற்கனவே 22 போக்சோ நீதிமன்றங்கள் உள்ளன; புதிய நீதிமன்றங்கள் மூலம் 47 காவல்துறை மாவட்டங்களில் மொத்தம் 48 போக்சோ நீதிமன்றங்களாக இது அதிகரிக்கும்.
  • குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழக்கு விசாரணைகளை விரைவுபடுத்துவதையும், உரிய நேரத்தில் நீதியை உறுதி செய்வதையும் புதிய நீதிமன்றங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளன.
  • ஏற்கனவே 11 NDPS சிறப்பு நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன; காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர் மற்றும் சென்னை ஆகிய இடங்களில் மேலும் 4 நீதிமன்றங்கள் அமைக்கப்பட உள்ளன.
  • இந்த விரிவாக்கத்திற்குப் பிறகு, 1985 ஆம் ஆண்டின் NDPS சட்டத்தின் கீழ் உள்ள வழக்குகளைக் கையாள தமிழ்நாட்டில் 15 NDPS சிறப்பு நீதிமன்றங்கள் செயல்படும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்