துபாயின் சுற்றுலாத் துறையை வலுப்படுத்தும் நோக்கில், மீண்டும் வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்காக, உலகின் முதல் நகர அளவிலான, அழைப்பு விடுக்கப்பட்டவர்கள் மட்டுமே பங்கேற்கக்கூடிய 'துபாய் அக்சஸ் கிளப்' (Dubai Access Club) எனும் சுற்றுலா விசுவாசத் திட்டத்தைத் (tourism loyalty programme) தொடங்கியுள்ளது.
டக்கார் நகரில் நடைபெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான இளையோர் ஒலிம்பிக் விளையாட்டுகளில் பெண்களுக்கான 100 மீ ஃப்ரீஸ்டைல் நீச்சல் போட்டியில் தினிதி தேசிங்கு வெண்கலப் பதக்கம் வென்றார். இதன்மூலம் அவர், பதக்கம் வென்ற இந்தியாவின் முதல் பெண் நீச்சல் வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
இந்திய கடற்படைக்காக எட்டு அடுத்த தலைமுறை கார்வெட் (Next-generation corvettes) போர்க்கப்பல்களைக் கட்டும் நோக்கில் கார்டன் ரீச் ஷிப்பில்டர்ஸ் அண்ட் இன்ஜினியர்ஸ் லிமிடெட் (GRSE - 5 கார்வெட்டுகள்) மற்றும் கோவா ஷிப்யார்ட் லிமிடெட் (GSL - 3 கார்வெட்டுகள்) ஆகிய நிறுவனத்துடன் பாதுகாப்பு அமைச்சகம் ₹53,866.50 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது.
இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI), தொலைத்தொடர்பு இணைப்பு (மூன்றாவது திருத்தம்) விதிமுறைகள், 2026 ஐ வெளியிட்டுள்ளதுடன் இது 2027 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும்.
இந்தத் திருத்தம், தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்கள், உரிமம் பெற்ற சேவைப் பகுதி (LSA) அளவில், தங்களுக்கு இடையிலான பிணையப் போக்குவரத்துப் பரிமாற்ற இடங்களை ஒருமித்த கருத்துடன் தீர்மானித்துக் கொள்ள அனுமதிக்கிறது.
போர்கள் மற்றும் ஆயுத மோதல்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும், இயற்கை வளங்களைப் பாதுகாப்பதை ஊக்குவிக்கவும் போர் மற்றும் ஆயுத மோதல்களில் சுற்றுச்சூழல் சுரண்டப்படுவதைத் தடுப்பதற்கான சர்வதேச தினம் ஆண்டுதோறும் நவம்பர் 6 ஆம் தேதியன்று அனுசரிக்கப்படுகிறது.
பள்ளிகளில் நடைபெறும் வன்முறை, துன்புறுத்தல் மற்றும் இணையவழி துன்புறுத்தல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், பாதுகாப்பான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய கற்றல் சூழலை ஊக்குவிப்பதும் இதன் நோக்கமாகக் கொண்ட பள்ளிகளில் வன்முறை மற்றும் துன்புறுத்தல் (இணையவழித் துன்புறுத்தல் உட்பட) ஆகியவற்றிற்கு எதிரான சர்வதேச தினம், நவம்பர் மாதத்தின் முதல் வியாழக்கிழமையன்று (நவம்பர் 5, 2026) கடைப்பிடிக்கப்பட்டது.
2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு Every Learner Safe and Well: From Promise to Practice என்பதாகும்.