TNPSC Thervupettagam

டேமர் குத்துச்சண்டை போட்டி 2026

November 9 , 2026 9 days 115 0
  • பின்லாந்தின் தம்பேர் நகரில் 2026 ஆம் ஆண்டு அக்டோபர் 30 முதல் நவம்பர் மாதம் 1 ஆம் தேதி வரை நடைபெற்ற 46-வது சர்வதேச டேமர் குத்துச்சண்டை போட்டி 2026-இல் இந்தியா பதக்கப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது.
  • 14 பேர் கொண்ட இந்திய அணி 4 தங்கம், 2 வெள்ளி மற்றும் 8 வெண்கலம் என மொத்தம் 14 பதக்கங்களை வென்றது.
  • ஆர்த்தி தாரியல் (54 கிலோ), அங்குஷிதா போரோ (65 கிலோ), அருந்ததி சவுத்ரி (70 கிலோ) மற்றும் பவன் பார்த்வால் (55 கிலோ) ஆகியோர் தங்கப்பதக்கம் வென்றனர்.
  • ஜாஸ்மின் லம்போரியா (57 கிலோ) மற்றும் முகமது ஹுசாமுதீன் (60 கிலோ) ஆகியோர் வெள்ளிப்பதக்கம் வென்றனர்.
  • விவேக் மீனா, ஹிதேஷ், அக்‌ஷய், போபின் சவுகான், சேத்தன் சவுத்ரி, தனு, திஷா பாட்டீல் மற்றும் இம்ரோஸ் கான் ஆகியோர் வெண்கலப்பதக்கம் வென்றனர்.
  • பதக்கம் பெற்றவர்களில் பவன் பார்த்வால் மற்றும் அருந்ததி சவுத்ரி ஆகியோர் இந்திய ராணுவத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்