TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

November 23 , 2026 6 days 85 0
  • பழைய மகாபலிபுரம் சாலையில் (OMR) உள்ள சென்னை செம்மஞ்சேரியில் 124.31 ஏக்கர் பரப்பளவில் ஒலிம்பிக் நகரத்தையும், ஐந்து இடங்களில் விளையாட்டு சிறப்பு மையங்களையும் அமைப்பதற்கான திட்டங்களை தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது.
    • சென்னை, திருவண்ணாமலை, கோயம்புத்தூர், நாகப்பட்டினம் மற்றும் பரமக்குடி ஆகிய ஐந்து இடங்களில் மொத்தம் 64.5 ஏக்கர் பரப்பளவில் இவை அமைக்கப்பட உள்ளன.
  • மகாராஷ்டிராவில் உள்ள லட்கர், குஹாகர் மற்றும் ஸ்ரீவர்தன் கடற்கரைகள் 2026–27 ஆம் ஆண்டிற்கான சர்வதேச நீலக் கொடி (Blue Flag) அங்கீகாரத்தைப் பெற்றுள்ளன, இது இத்திட்டத்தின் கீழ் அம்மாநிலத்திற்குக் கிடைத்த முதல் அங்கீகாரமாகும்.
    • லட்கர் மற்றும் குஹாகர் கடற்கரைகள் ரத்னகிரி மாவட்டத்திலும், ஸ்ரீவர்தன் கடற்கரை ராய்காட் மாவட்டத்திலும் அமைந்துள்ளன.
  • மத்திய உள்துறை அமைச்சகம் (MHA) இந்தியாவின் முக்கிய விசா பிரிவுகளை 13-லிருந்து 9 ஆகவும், துணைப் பிரிவுகளை 49-லிருந்து 23 ஆகவும் குறைத்துள்ளது, மேலும் திருத்தப்பட்ட இந்த நடைமுறை 2026 ஆம் ஆண்டின் இறுதிக்குள் செயல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • எரிசக்தி மற்றும் தூய்மையான காற்று ஆராய்ச்சி மையத்தின் (CREA) ஆய்வின்படி, 2026 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இந்தியாவின் ரஷ்ய புதைபடிவ எரிபொருள் இறக்குமதி சாதனை அளவாக €6.4 பில்லியனை எட்டியுள்ளது.
    • ரஷ்ய புதைபடிவ எரிபொருட்களை வாங்கும் நாடுகளில் சீனாவிற்கு அடுத்த படியாக இந்தியா இரண்டாவது பெரிய நாடாக உள்ளது, இதில் கச்சா எண்ணெய் இறக்குமதி 91% (€5.8 பில்லியன்) ஆகும்.
  • குழந்தைகள் மீதான பாலியல் சுரண்டல், துஷ்பிரயோகம் மற்றும் வன்முறை ஆகியவற்றைத் தடுப்பதற்கும் அதிலிருந்து மீள்வதற்கும் ஆன உலக தினம், குழந்தை பாலியல் சுரண்டல் மற்றும் துஷ்பிரயோகம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தடுக்கவும், குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாக்கவும், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிர் பிழைத்தவர்களின் மீட்சிக்கு ஆதரவளிக்கவும் ஆண்டுதோறும் நவம்பர் 18 அன்று அனுசரிக்கப்படுகிறது.
    • 2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு “Ethical media reporting on sexual violence against children” என்பதாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்