தமிழ்நாடு மாநில இரத்தப் பரிமாற்றக் கழகத்தின் (TNSBTC) கீழ் அரிய வகை இரத்தக் குழுக்களைக் கொண்ட தன்னார்வ இரத்த தானம் செய்பவர்களின் மாநில அளவிலான இணையவழி பதிவேட்டை நிறுவுவதற்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
அவசர காலங்களில் பொருத்தமான இரத்தம் சரியான நேரத்தில் கிடைப்பதை உறுதி செய்வதற்காக, அரிய வகை இரத்தக் குழுக்களைக் கொண்ட தன்னார்வ இரத்த தானம் செய்பவர்களின் மாநில அளவிலான தரவுத்தளத்தை இப்பதிவேடு பராமரித்து தொடர்ந்து புதுப்பிக்கும்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து உரிமம் பெற்ற இரத்த மையங்களும் தகுதியான இரத்த தானம் செய்பவர்களைக் கண்டறிந்து, அவர்களின் சம்மதத்துடன் பதிவு செய்வதை எளிதாக்கும்.
இரத்த தானம் செய்பவர்களின் பதிவு, சரிபார்ப்பு, புதுப்பித்தல் மற்றும் தரவுத் தளத்தின் ரகசியத்தன்மை ஆகியவற்றை TNSBTC மேற்பார்வையிடும்.
செயல்பாட்டில் உள்ள செஞ்சுருள் சங்கங்களைக் (RRCs) கொண்ட கல்லூரிகளில் இரத்த தான சங்கங்களை அமைப்பதற்கும் அரசு ஒப்புதல் அளித்துள்ளது.