TNPSC Thervupettagam

TOI-6894b – வாயு நிரம்பிய இராட்சத கோள்

June 14 , 2025 12 hrs 0 min 25 0
  • சனிக்கோளின் அளவை ஒத்த ஒரு வாயு நிரம்பிய இராட்சத கோளானது, வழக்கத்திற்கு மாறான ஒரு சிறிய செந்நிறக் குள்ள நட்சத்திரத்தைச் சுற்றி வருவது கண்டறியப்பட்டு உள்ளது.
  • இந்த அரிய இணைவானது சிறிய நட்சத்திரங்கள் அவற்றைச் சுற்றியுள்ள வட்டுகளில் இவ்வளவு பெரிய கோள்களை உருவாக்க போதுமான கூறுகளைக் கொண்டிருக்காது என்று கூறும் தற்போதைய மாதிரிகளை மறுக்கின்றது.
  • TOI-6894 என பெயரிடப்பட்ட இந்த நட்சத்திரமானது சூரியனின் நிறையின் ஐந்தில் ஒரு பங்கு மட்டுமே ஆகும்.
  • TOI-6894 ஆனது புவியிலிருந்து சுமார் 240 ஒளி ஆண்டுகள் தொலைவில் லியோ என்ற விண்மீன் திரளில் உள்ளது.
  • இது ஒரு பெரிய கோளினைக் கொண்டிருக்கும் மிகச்சிறிய அறியப்பட்ட நட்சத்திரம் ஆகும்.
  • இந்தக் கிரகம் ஆனது தோராயமாக மூன்று நாட்களில் ஒரு சுற்றுப்பாதை பயணத்தை நிறைவு செய்கிறது.
  • புவியானது சூரியனுக்கு எவ்வளவு அருகில் உள்ளதோ, அதே போல இக்கோள் ஆனது அதன் நட்சத்திரத்திற்கு சுமார் 40 மடங்கு அருகில் உள்ளது.
  • நமது சூரிய மண்டலத்திற்கு வெளியே காணப்படும் இதர மற்ற கிரகங்களை விட இது மிகவும் குளிர்ந்ததாக உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்