சீனாவில் உள்ள அறிவியலாளர்கள் ஒரு புதிய உயர் அழுத்த நுட்பத்தைப் பயன்படுத்தி பிஸ்மத், காலியம், தகரம் மற்றும் ஈயம் ஆகியவற்றின் அணு அளவில் மெல்லிய இரு பரிமாண உலோகப் படலங்களை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளனர்.
இருபரிமாண உலோகங்கள் என்பவை உலோக அணுக்களின் மிகவும் மெல்லியதான அடுக்குகள் என்பதோடு அவை பொதுவாக 1-2 அணுக்கள் அளவில் மட்டுமே தடிமன் கொண்டவை.
இந்தக் குழுவின் கூற்றுப்படி, பிஸ்மத் தாள்/படலம் 6.3 Å தடிமன் மட்டுமே கொண்டது.
வலுவான புல விளைவு மற்றும் நேரியல் அல்லாத ஹால் விளைவு ஆகிய இரண்டும் எந்த ஒரு முப்பரிமாண உலோகங்களிலும் அல்லாமல் இருபரிமாண உலோகங்களில் மட்டும் நிகழ்கின்றன.