உலக வர்த்தக அமைப்பின் (WTO) சீர்திருத்தத்தை ஊக்குவிப்பதற்காக CUTS இன்டர்நேஷனல் அமைப்பானது TRaNJA முன்னெடுப்பினைத் தொடங்கியது.
TRaNJA என்பது Trade Not Just Aid: Winners and Losers in the World Trade Organization என்பதைக் குறிக்கிறது.
இந்த முன்னெடுப்பு நியாயமான மற்றும் விதி அடிப்படையிலான உலகளாவிய வர்த்தக அமைப்பாக WTO அமைப்பின் பங்கை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த திட்டம் சான்றுகள் அடிப்படையிலான பேச்சுவார்த்தை, உள்ளடக்கிய வர்த்தகத்தை ஊக்குவித்தல், டிஜிட்டல் வர்த்தகம் மற்றும் பருவநிலை பிரச்சினைகளை நிவர்த்தி செய்தல் மற்றும் தெற்கு நாடுகளின் ஒத்துழைப்பை மேம்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.
உலகளாவிய வர்த்தகத்தில் சுமார் 70% ஆனது இன்னும் WTO விதிகளின் கீழ் செயல் படுவது சீர்திருத்தத்திற்கான முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுகிறது.