கோவிட் – 19 நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள சுகாதார நலப் பணியாளர்களுக்குப் போக்குவரத்துச் சேவைகளை அளிப்பதற்காக தேசிய சுகாதார ஆணையமானது (NHA – National Health Authority) ஊபர் இந்தியாவுடன் இணைந்துள்ளது.
இந்த வசதியானது “UberMEdic சேவை” என்ற பெயரின் கீழ் தொடங்கப் பட்டுள்ளது.
NHA என்பது ஆயுஷ்மான் பாரத் திட்டத்தைச் செயல்படுத்தும் ஒரு தலைமை அமைப்பாகும்.