TNPSC Thervupettagam
January 13 , 2026 13 days 71 0
  • ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார மற்றும் சமூக விவகாரங்கள் துறையானது (UN DESA) 2026 ஆம் ஆண்டிற்கான உலகப் பொருளாதார நிலை மற்றும் வாய்ப்புகள் அறிக்கையை வெளியிட்டது.
  • 2025-26 ஆம் நிதியாண்டிற்கான இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி 7.2% ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது என்பதோடு இது இந்திய அரசாங்கத்தின் 7.4% கணிப்பை விடச் சற்று குறைவாகும்.
  • இந்தியா இப்போது உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக உள்ளது.
  • வலுவான நுகர்வு, பொது முதலீடு, சமீபத்திய வரிச் சீர்திருத்தங்கள் மற்றும் பணவியல் தளர்வு ஆகியவற்றால் இந்த வளர்ச்சி ஆதரிக்கப்படுகிறது.
  • இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2026-27 ஆம் ஆண்டில் 6.6% ஆகவும், 2027-28 ஆம் ஆண்டில் 6.8% ஆகவும் வளரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
  • அமெரிக்காவின் நியூயார்க்கில் அமைந்துள்ள UN DESA, மேம்பாட்டுப் பிரச்சினைகள், பொருளாதாரம் மற்றும் சமூகப் பகுப்பாய்வு ஆகியவற்றில் ஈடுபடுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்