TNPSC Thervupettagam

UN-GGIM-AP அமைப்பில் இந்தியாவின் தலைமைத்துவம்

October 24 , 2025 7 days 44 0
  • 2025-2028 ஆம் காலக் கட்டத்திற்கான ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியத்திற்கான ஐக்கிய நாடுகள் சபையின் உலகளாவிய புவியிடத் தகவல் மேலாண்மை (UN-GGIM-AP) பிராந்தியக் குழுவின் இணைத் தலைமைப் பொறுப்பிற்கு இந்தியா தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது.
  • இந்தியத் தலைமை நில அளவையாளர் ஹிதேஷ் குமார் S. மக்வானா (இந்திய ஆட்சிப் பணி அதிகாரி), இந்த மதிப்புமிக்கப் பதவியில் இந்தியாவின் பிரதிநிதியாக செயல்படுவார்.
  • கொரியக் குடியரசின் கோயாங்-சியில் நடைபெற்ற UN-GGIM-AP குழுவின் 14வது முழு அளவிலான கூட்டத்தின் போது இந்தத் தேர்தல் நடைபெற்றது.
  • UN-GGIM-AP ஆனது 56 நாடுகளின் தேசியப் புவியிடத் தகவல் நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது மற்றும் புவியிட தகவல்களின் பொருளாதார, சமூக மற்றும் சுற்றுச்சூழல் நன்மைகளை ஊக்குவிக்கிறது.
  • UN-GGIM என்பது உலகளவில் புவிசார் தகவல் உற்பத்தி மற்றும் பயன்பாட்டிற்கான வழிகாட்டுதல்களையும் கொள்கைகளையும் அமைக்கும் அரசுகளுக்கிடையேயான உயர் நிலை அமைப்பாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்