ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்ட அமைப்பானது (UNEP) "Running on Empty" என்ற தலைப்பிலான அதன் 2025 ஆம் ஆண்டிற்கான ஏற்பு/தகவமைப்பு இடைவெளி அறிக்கையை (AGR) வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கையானது வளர்ந்து வரும் நாடுகளில் தேவைப்படும் ஏற்பு நிதிக்கான செலவு குறித்த தகவலை அளிக்கிறது என்பதோடு இது மாதிரியாக கணிக்கப்பட்ட செலவுகளின் அடிப்படையில் 2035 ஆம் ஆண்டில் ஆண்டிற்கு 310 பில்லியன் டாலராக கணிக்கப் பட்டு உள்ளது.
தேசிய அளவில் நிர்ணயிக்கப்பட்ட பங்களிப்புகள் மற்றும் தேசிய ஏற்புத் திட்டங்களில் வெளிப்படுத்தப்பட்ட தேவைகள், எண்ணிக்கை ஆண்டிற்கு 365 பில்லியன் டாலராக உயர்கிறது.
ஆனால், முந்தைய ஆண்டில் இருந்த 28 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்த வளர்ந்து வரும் நாடுகளுக்கான சர்வதேச பொது தகவமைப்பு நிதி வழங்கீடுகள் ஆனது 2023 ஆம் ஆண்டில், 26 பில்லியன் அமெரிக்க டாலர்களாக குறைந்தன.
இது வளர்ந்து வரும் நாடுகளில் தகவமைப்பு நிதித் தேவைகளை தற்போதைய நிதி வழங்கலை விட 12 முதல் 14 மடங்கு அதிகமாக உயர்த்துகிறது.
தற்போதைய நிதிப் போக்குகள் தொடர்ந்தால், 2025 ஆம் ஆண்டிற்குள் சர்வதேசப் பொதுத் தகவமைப்பு நிதியை 2019 ஆம் ஆண்டிலிருந்த நிலைகளிலிருந்து இரட்டிப்பாக்கும் கிளாஸ்கோ பருவநிலை ஒப்பந்த இலக்கை அடைய முடியாது.
இலக்கு நிர்ணயிக்கப்பட்ட கொள்கை நடவடிக்கை மற்றும் கலப்பு நிதித் தீர்வுகளால் ஆதரிக்கப் பட்டால் ஆண்டிற்கு சுமார் 50 பில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்கும் திறனுடன் கூடிய தனியார் துறையானது இன்னும் அதிகமாகப் பங்களிக்க முடியும்.