TNPSC Thervupettagam

UNEP அமைப்பின் ஏற்பு இடைவெளி அறிக்கை 2025

November 4 , 2025 17 days 81 0
  • ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்ட அமைப்பானது (UNEP) "Running on Empty" என்ற தலைப்பிலான அதன் 2025 ஆம் ஆண்டிற்கான ஏற்பு/தகவமைப்பு இடைவெளி அறிக்கையை (AGR) வெளியிட்டுள்ளது.
  • இந்த அறிக்கையானது வளர்ந்து வரும் நாடுகளில் தேவைப்படும் ஏற்பு நிதிக்கான செலவு குறித்த தகவலை அளிக்கிறது என்பதோடு இது மாதிரியாக கணிக்கப்பட்ட செலவுகளின் அடிப்படையில் 2035 ஆம் ஆண்டில் ஆண்டிற்கு 310 பில்லியன் டாலராக கணிக்கப் பட்டு உள்ளது.
  • தேசிய அளவில் நிர்ணயிக்கப்பட்ட பங்களிப்புகள் மற்றும் தேசிய ஏற்புத் திட்டங்களில் வெளிப்படுத்தப்பட்ட தேவைகள், எண்ணிக்கை ஆண்டிற்கு 365 பில்லியன் டாலராக உயர்கிறது.
  • ஆனால், முந்தைய ஆண்டில் இருந்த 28 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்த வளர்ந்து வரும் நாடுகளுக்கான சர்வதேச பொது தகவமைப்பு நிதி வழங்கீடுகள் ஆனது 2023 ஆம் ஆண்டில், 26 பில்லியன் அமெரிக்க டாலர்களாக குறைந்தன.
  • இது வளர்ந்து வரும் நாடுகளில் தகவமைப்பு நிதித் தேவைகளை தற்போதைய நிதி வழங்கலை விட 12 முதல் 14 மடங்கு அதிகமாக உயர்த்துகிறது.
  • தற்போதைய நிதிப் போக்குகள் தொடர்ந்தால், 2025 ஆம் ஆண்டிற்குள் சர்வதேசப் பொதுத் தகவமைப்பு நிதியை 2019 ஆம் ஆண்டிலிருந்த நிலைகளிலிருந்து இரட்டிப்பாக்கும் கிளாஸ்கோ பருவநிலை ஒப்பந்த இலக்கை அடைய முடியாது.
  • இலக்கு நிர்ணயிக்கப்பட்ட கொள்கை நடவடிக்கை மற்றும் கலப்பு நிதித் தீர்வுகளால் ஆதரிக்கப் பட்டால் ஆண்டிற்கு சுமார் 50 பில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்கும் திறனுடன் கூடிய தனியார் துறையானது இன்னும் அதிகமாகப் பங்களிக்க முடியும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்