கோவிட் – 19 தொற்றுக்குச் சிகிச்சை அளிப்பதற்காக உருவாக்கப் பட்ட வின்கோவ் – 19 (VINCOV – 19) எனப்படும் ஒரு புதிய எதிர்ப்பு மருந்தினை (நோய் எதிர்ப்பு பொருள்) மருத்துவச் சோதனைக்கு உட்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இது,
ஹைதராபாத் பல்கலைக்கழகம் (UOH)
CSIR நிருவனத்தின் செல் மற்றும் மூலக்கூறு உயிரியல் மையம் (CSIR – CCMB) மற்றும்
வின்ஸ் பயோ பிராடக்ட்ஸ் லிமிடெட் ஆகியவற்றின் ஒரு கூட்டு முயற்சியாகும்.
கோவிட்-19 பெருந்தொற்றிற்கு எதிராக இந்த மருந்தைப் பயன்படுத்தலாமா என்பதை பரிசோதிப்பதற்காக வேண்டி இதனை மருத்துவச் சோதனைக்கு உட்படுத்த இந்தியத் தலைமை மருந்து கட்டுப்பாட்டு அமைப்பானது ஒப்புதல் வழங்கி உள்ளது.