2019 ஆம் ஆண்டின் உலகளாவிய போட்டித் திறன் குறியீட்டில் இந்தியா 10 புள்ளிகள் குறைந்து 68வது இடத்தில் உள்ளது.
இந்த அறிக்கையானது உலக பொருளாதார மன்றத்தினால் (WEF - World Economic Forum) வெளியிடப் பட்டுள்ளது.
இந்தியாவின் மதிப்பெண் ஆனது மொத்தமுள்ள 12 அளவுருக்களில் 8 அளவுருக்களில் குறைந்துள்ளது. மற்ற நாடுகள் இந்தியாவை விட வேகமாக தங்களது உள்நாட்டு வணிகச் சூழலை மேம்படுத்தியுள்ளன.
இந்த ஒட்டுமொத்த போட்டித் திறன் தரவரிசையில், சிங்கப்பூர் அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளி முதல் இடத்தைப் பிடித்துள்ளது.