உலக நீரிழிவு நோய் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு, 2026 ஆம் ஆண்டு நவம்பர் 14 அன்று பெரியவர்களுக்கான வகை 1 (Type 1) நீரிழிவு நோயைக் கண்டறிதல் மற்றும் நிர்வகிப்பதற்கான தனது முதலாவது வழிகாட்டுதல்களை உலக சுகாதார அமைப்பு (WHO) வெளியிட்டது.
வகை 1 நீரிழிவு நோய் என்பது கணையம் மிகக் குறைந்த அளவு இன்சுலினை உற்பத்தி செய்யும் அல்லது சுத்தமாக உற்பத்தி செய்யாத ஒரு வாழ்நாள் நோயாகும்; இதனால் நோயாளிகள் உயிர்வாழ்வதற்குத் தினசரி இன்சுலின் சிகிச்சையைச் சார்ந்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
2025 ஆம் ஆண்டில் உலகளவில் சுமார் 9.5 மில்லியன் மக்கள் வகை 1 நீரிழிவு நோயுடன் வாழ்ந்து வந்தனர் மேலும் அந்த ஆண்டில் 5,00,000 புதிய பாதிப்புகள் கண்டறியப் பட்டன.
தினசரி பலமுறை இன்சுலின் ஊசி போட்டுக்கொள்வதையும், இரத்தப் பரிசோதனைகள், விரல் நுனிப் பரிசோதனைகள் அல்லது தொடர் குளுக்கோஸ் கண்காணிப்பு (CGM) சாதனங்கள் மூலம் இரத்தச் சர்க்கரை அளவைத் தொடர்ந்து கண்காணிப்பதையும் உலக சுகாதார அமைப்பு பரிந்துரைக்கிறது.
2030 ஆம் ஆண்டிற்குள் வகை 1 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் மலிவு விலையில் இன்சுலின் சிகிச்சை மற்றும் இரத்தச் சர்க்கரை சுய-கண்காணிப்பு வசதி கிடைப்பதை உறுதி செய்ய உலக சுகாதார அமைப்பு இலக்கு நிர்ணயித்துள்ளது.