ஆஸ்திரேலியா பல பத்தாண்டுகளுக்கு அதிக அளவில் புதைபடிவ எரிபொருட்களை ஏற்றுமதி செய்வதைத் தொடரும் என்று கணிக்கப்பட்டுள்ளதோடு 2030 ஆம் ஆண்டு வரை நிலக்கரி ஏற்றுமதி ஆண்டுக்கு சுமார் 350 மில்லியன் டன்களாக (Mt) இருக்கும்.
ஆஸ்திரேலியா உலகின் இரண்டாவது பெரிய நிலக்கரி ஏற்றுமதியாளராகும்.
மேலும், ஆஸ்திரேலியா உலகின் மூன்றாவது பெரிய LNG ஏற்றுமதியாளராகவும் உள்ளது.
ஆஸ்திரேலியா 2025 ஆம் ஆண்டில் 352 மில்லியன் டன்கள் கறுப்பு நிலக்கரியை ஏற்றுமதி செய்ததுடன், இது உலகளாவிய ஏற்றுமதியில் 25 சதவீதமாகும்.
அதன் உள்நாட்டு பசுமை இல்ல வாயு வெளியேற்றம் உலகளாவிய மொத்தத்தில் 1 சதவீதத்திற்கும் சற்று அதிகமாக உள்ளது.
துருக்கியின் அன்டால்யாவில் நடைபெறும் COP31 மாநாட்டில் ஆஸ்திரேலியா பேச்சு வார்த்தைகளுக்குத் தலைமை தாங்குகிறது.
துருக்கி COP மாநாட்டின் தலைமைப் பதவியை வகிக்கிறது, அதே நேரத்தில் ஆஸ்திரேலியா பேச்சுவார்த்தைகளின் தலைவராகப் பணியாற்றுகிறது.
COP31 மாநாட்டில் துருக்கியால் தொடங்கப்பட்ட '35க்கு 35 உலகளாவிய மின் மயமாக்கல் உறுதிமொழி', 2035ஆம் ஆண்டுக்குள் உலகளாவிய இறுதி ஆற்றல் நுகர்வில் மின்சாரத்தின் பங்கை 35 சதவீதமாக அதிகரிப்பதை ஒரு நோக்கமாகக் கொண்டுள்ளது.