TNPSC Thervupettagam

WHO - நீரிழிவு நோய் வழிகாட்டுதல்கள் 2026

November 24 , 2026 3 days 81 0
  • உலக நீரிழிவு நோய் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு, 2026 ஆம் ஆண்டு நவம்பர் 14 அன்று பெரியவர்களுக்கான வகை 1 (Type 1) நீரிழிவு நோயைக் கண்டறிதல் மற்றும் நிர்வகிப்பதற்கான தனது முதலாவது வழிகாட்டுதல்களை உலக சுகாதார அமைப்பு (WHO) வெளியிட்டது.
  • வகை 1 நீரிழிவு நோய் என்பது கணையம் மிகக் குறைந்த அளவு இன்சுலினை உற்பத்தி செய்யும் அல்லது சுத்தமாக உற்பத்தி செய்யாத ஒரு வாழ்நாள் நோயாகும்; இதனால் நோயாளிகள் உயிர்வாழ்வதற்குத் தினசரி இன்சுலின் சிகிச்சையைச் சார்ந்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
  • 2025 ஆம் ஆண்டில் உலகளவில் சுமார் 9.5 மில்லியன் மக்கள் வகை 1 நீரிழிவு நோயுடன் வாழ்ந்து வந்தனர் மேலும் அந்த ஆண்டில் 5,00,000 புதிய பாதிப்புகள் கண்டறியப் பட்டன.
  • தினசரி பலமுறை இன்சுலின் ஊசி போட்டுக்கொள்வதையும், இரத்தப் பரிசோதனைகள், விரல் நுனிப் பரிசோதனைகள் அல்லது தொடர் குளுக்கோஸ் கண்காணிப்பு (CGM) சாதனங்கள் மூலம் இரத்தச் சர்க்கரை அளவைத் தொடர்ந்து கண்காணிப்பதையும் உலக சுகாதார அமைப்பு பரிந்துரைக்கிறது.
  • 2030 ஆம் ஆண்டிற்குள் வகை 1 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் மலிவு விலையில் இன்சுலின் சிகிச்சை மற்றும் இரத்தச் சர்க்கரை சுய-கண்காணிப்பு வசதி கிடைப்பதை உறுதி செய்ய உலக சுகாதார அமைப்பு இலக்கு நிர்ணயித்துள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்