WMO அமைப்பின் ஆசியாவில் பருவநிலை குறித்த தகவல் அறிக்கை 2024
June 27 , 2025 7 days 51 0
2024 ஆம் ஆண்டானது பரவலான, நீடித்த வெப்ப அலைகளுடன் ஆசியாவில் பதிவான வெப்பமான ஆண்டாகும்.
2024 ஆம் ஆண்டில் உலகளாவியச் சராசரி வெப்பநிலை 1850–2024 வரை மிக அதிகமாக இருந்தது.
இது 2023 ஆம் ஆண்டில் நிர்ணயிக்கப்பட்ட 1.45°C வெப்பநிலையினைத் தாண்டியது.
ஆசியாவில், உலகச் சராசரியை விட சுமார் இரண்டு மடங்கு வேகமாக வெப்பமடைந்த கடல் மேற்பரப்பு வெப்பநிலை இதுவரை இல்லாத அளவிலான உச்சத்தை எட்டியது.
ஆசியாவின் பசிபிக் மற்றும் இந்தியப் பெருங்கடல் கடற்கரைகளில் கடல் மட்ட உயர்வு உலகச் சராசரியை விட அதிகமாக இருந்தது.
இமயமலை மற்றும் தியான் ஷானில் கண்காணிக்கப்பட்ட 24 பனிப்பாறைகளில் 23 அதன் பனிப் பரவலை இழந்தது என்பதோடு இது பனிப்பாறை ஏரி வெடிப்பினால் ஏற்படும் வெள்ளம் (GLOF) மற்றும் நிலச்சரிவு அபாயங்களை அதிகரித்தது.
2024 ஆம் ஆண்டில், கடல்சார் வெப்ப அலைகள் பெரும்பாலான ஆசியப் பெருங்கடல் பகுதிகளைப் பாதித்தன.
ஐக்கிய அரபு அமீரகத்தில், 24 மணி நேரத்தில் 259.5 மிமீ மழைப் பொழிவு பதிவானது என்பதோடு இது 1949 ஆம் ஆண்டிற்குப் பிறகு ஏற்பட்ட மிகவும் கடுமையான சில நிகழ்வுகளில் ஒன்றாகும்.
2024 ஆம் ஆண்டில் இந்திய நாடு முழுவதும் மின்னல் தாக்கியதில் சுமார் 1,300 பேர் கொல்லப் பட்டனர் என்ற நிலையில் ஜூலை 10 ஆம் தேதியன்று 72 பேர் உயிரிழந்தனர்.
சீனாவில் ஏற்பட்ட வறட்சி ஆனது சுமார் 4.8 மில்லியன் மக்களைப் பாதித்தது மற்றும் நேரடியாக 2.89 பில்லியன் சீன யுவான் (CNY) மதிப்பிலான இழப்பினை ஏற்படுத்தியது.