December 5 , 2021
1610 days
762
- கோவாக்சினை அடுத்து இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட 2வது தடுப்பு மருந்து சைகோவ்–டி ஆகும்.
- சைகோவ்–டி முதலில் ஏழு மாநிலங்களில் வழங்கப்பட உள்ளது.
- அவை தமிழ்நாடு, பீகார், மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட், பஞ்சாப், மேற்கு வங்காளம் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகியனவாகும்.
- இந்தத் தடுப்பு மருந்தானது 12 முதல் 19 வயதிற்குட்பட்ட வயதினருக்கு மட்டுமே வழங்கப் பட உள்ளது.
- இது 3 தவணையிலான ஒரு தடுப்பூசி ஆகும்.
- இதன் முதல் தவணை 28வது நாளிலும், இரண்டாவது தவணை 56வது நாளிலும் வழங்கப்படுகிறது.
- சைகோவ்–டி, 66% செயல்திறனை வழங்கியது.
- இந்தத் தடுப்பு மருந்தானது கடிலா ஹெல்த்கேர் என்ற இந்திய மருந்து உற்பத்தி நிறுவனத்தினால் உருவாக்கப்பட்டது.
- சைகோவ்–டி மருந்தானது பிளாஸ்மிட் டி.என்.ஏ. என்பதில் உருவாக்கப்பட்டது.

Post Views:
762