இந்தியாவிற்கும் வங்க தேசத்திற்கும் இடையிலான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தமானது திரிபுராவில் உள்ள சப்ரூம் நகரத்திற்கான குடிநீர் விநியோக திட்டத்திற்காக இந்தியாவினால் ஃபெனி ஆற்றில் இருந்து 1.82 cusecs (பாய்வு வீத கொள்ளளவு அலகு) தண்ணீரை எடுப்பது தொடர்பான ஒரு ஒப்பந்தமாகும்.
ஃபெனி நதி
ஃபெனி நதியானது தென்கிழக்கு வங்க தேசத்தில் உள்ள ஒரு நதியாகும்.
நீர் உரிமை தொடர்பாக தொடர்ச்சியான சர்ச்சைகளைக் கொண்டுள்ள இந்த நதி இரு நாட்டின் எல்லைகளைக் கடந்து செல்லும் ஒரு நதியாகும்.
ஃபெனி நதியானது தெற்கு திரிபுரா மாவட்டத்தில் உருவாகி, சப்ரூம் நகரம் வழியாகப் பாய்ந்து, பின்னர் வங்க தேசத்தில் நுழைகின்றது.
லிட்டில் ஃபெனி என்றும் அழைக்கப்படும் முஹூரி நதியானது நவகாளி மாவட்டத்தில் உற்பத்தியாகி அதன் பின் ஃபெனி நதியின் முகத்துவாரத்திற்கு அருகில் அதனுடன் இணைகின்றது.