ஃபோர்ப்ஸ் இதழின் 30 வயதிற்குட்பட்ட 30 ஆசிய தொழில்முனைவோர் பட்டியல் 2024
May 21 , 2024 510 days 385 0
ஃபோர்ப்ஸ் இதழின் ஒன்பதாவது 30 வயதிற்குட்பட்ட 30 ஆசிய தொழில் முனைவோர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
300 பேரில் 86 இந்தியர்கள் இடம் பெற்றுள்ளனர்.
10 பிரிவுகளில் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள இளம் தொழில்முனைவோர், தலைவர்கள் மற்றும் முன்னோடிகள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
இது கலை, பொழுதுபோக்கு, விளையாட்டு, நிதி மற்றும் துணிகர மூலதனம் ஆகிய பிரிவுகளை உள்ளடக்கும்.
கான்பூரின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தினைச் சேர்ந்த மூவர் இந்தப் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.
மெர்லின் இணை நிறுவனர்களான பிரத்யுஷ் ராய், சித்தார்த்தா சக்சேனா மற்றும் சிர்செந்து சர்க்கார் ஆகியோர் நுகர்வோர் தொழில்நுட்பப் பிரிவின் கீழ் இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.