இந்தியக் குடியரசுத் தலைவர் இராம்நாத் கோவிந்த் அவர்கள் குஜராத்தின் கேவாடியாவில் 80வது அகில இந்திய சபாநாயகர்கள் மாநாட்டைத் தொடங்கி வைத்தார்.
2 நாட்கள் நடைபெறும் இந்தக் கருத்தரங்கானது நவம்பர் 26 அன்று அரசியலமைப்பு தினத்தை அனுசரிப்பதற்காக மக்களவையினால் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
இந்தக் கருத்தரங்கின் கருத்துரு, “சட்டத்துறை, நிர்வாகத் துறை மற்றும் நீதித் துறை ஆகியவற்றின் சுமூகமான ஒத்துழைப்பு – வலுவான மக்களாட்சிக்கான அம்சம்” என்பது ஆகும்.
இந்தக் கருத்தரங்கின் தலைவர் மக்களவையின் சபாநாயகர் ஓம் பிர்லா ஆவார்.
2020 ஆம் ஆண்டானது சபாநாயகர்கள் மாநாட்டின் நூற்றாண்டு விழாவாகக் கொண்டாடப் படுகின்றது.
அகில இந்திய சபாநாயகர்கள் மாநாடானது 1921 ஆம் ஆண்டில் தொடங்கியது.