அடல் பீமா வியாக்தி கல்யாண் யோஜனா என்ற திட்டத்தின் கீழ் அமைப்பு சாராத் தொழிலாளருக்கு வேலைவாய்ப்பற்ற நிதியுதவிப் பலன்கள் அளிக்கப்படும் என்று இந்திய அரசு அறிவித்துள்ளது.
கொரானா வைரஸ் தொற்றுநோயின் தாக்கத்தின் காரணமாக வேலையிழந்த நபர்கள் இந்தப் பிரிவில் உள்ளடங்குவர்.
இந்த நோய்த்தொற்றின் காரணமாக வேலையிழந்த தொழிலாளர்கள் 3 மாதங்களுக்கு இந்த நிதியுதவியைப் பெற இருக்கின்றனர்.
இந்தத் திட்டம் பற்றி
இந்தத் திட்டமானது இஎஸ்ஐ திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பற்ற காப்பீடு வழங்குகின்றது.
இ.எஸ்.ஐ. (ESI – Employee State Insurance) என்பது அரசுத் தொழிலாளர் காப்பீட்டுத் திட்டமாகும்.
இந்தத் திட்டத்தின் கீழ், தொழிலாளர்கள் கடந்த 2 மாதங்களில் அவர்கள் பெற்ற ஊதியத்தின் 25% நிதியைப் பெறுகின்றனர்.
இந்தத் திட்டமானது 2018-ஆம் ஆண்டுமுதல் செயல்பட்டு வருகின்றது.
இந்தத் திட்டமானது மூன்று மாதங்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாமல் இருக்கும் தொழிலாளர்களுக்கு இழப்பீட்டை வழங்குகின்றது.