இந்தியா – மூன்றாவது மின்சார உற்பத்தியாளர் நாடு
March 22 , 2020
1866 days
699
- சர்வதேச ஆற்றல் முகமையின் தரவரிசை குறித்து மத்திய மின்துறை அமைச்சகமானது நாடாளுமன்றத்தில் தெரிவித்தது.
- இந்தத் தரவரிசையின்படி, உலகில் மின்சார உற்பத்தியில் 3வது மிகப்பெரியநாடாக இந்தியா விளங்குகின்றது.
- மேலும் இந்தியா தலா அல்லது தனிநபர் மின்சார நுகர்வில் 106 வது இடத்தில் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.
- இந்தியா தற்பொழுது மின்சாரப் பற்றாக்குறையிலிருந்து மின்சார மிகை கொண்டநாடாக உருவெடுத்துள்ளது.
- எனவே, இந்தியா தற்பொழுது நுகர்வோருக்கு தரமான மின்சாரம் வழங்குவதின் மீது கவனம் செலுத்துகின்றது.
- இந்தியாவின் மின்சார உற்பத்தியானது பெரும்பாலும் நிலக்கரியால் மேற்கொள்ளப்படுகின்றது.
- 2019-ஆம் ஆண்டு மே மாதத்தின்படி, 72% இந்திய மின்சாரமானது நிலக்கரியை அடிப்படையாகக் கொண்ட மின்சார ஆலைகளில் உற்பத்தி செய்யப்படுகின்றது.
- இருப்பினும், பெரும்பாலான ஆற்றல் நிறுவனங்கள் இந்தியா நிலக்கரியைச் சார்ந்திருப்பது குறையும் என்று கணித்துள்ளன.
- இந்தியா தற்பொழுது சூரிய ஒளி ஆற்றல் போன்ற இதர ஆற்றல் மூலங்களுக்கு மெதுவாக மாறி வருகின்றது.
- 2௦22 ஆம் ஆண்டிற்குள் இந்தியா 175 ஜிகாவாட் திறனுள்ள ஆற்றலைப் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் பெறுவதை இலக்காகக் கொண்டுள்ளது.
- இதில், 100 ஜிகாவாட் ஆற்றல் சூரிய ஒளியிலிருந்து பெறப்பட இருக்கின்றது.
Post Views:
699